பக்கம்:நாட்டிய ராணி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


வாகக் குரல் கொடுத்தது. உடனே சிலந்திப் பூச்சி வெளியில் வந்து சிங்கத்தின் கண்ணில் படாமல் மறைந்தோடிவிட்டது.

 “ஆகா ஒண்னும் வரவில்லை. தும்மல் வர வில்லை” என்று கூறிக்கொண்டே பெருமகிழ்ச்சி யோடு சிங்கம் குதிக்கத் தொடங்கியது. மற்ற விலங்குகளும் " ஒன்றும் வரவில்லை, ஒன்றும் வர வில்லை; இனிப்பயம் இல்லை” என்று குதித்தன. முயல்கள் தக்க திக்க தக்க திக்க தைதை தக்க திக்க தைதை ” எ ன்று நடனமாடிக் கொண்டே மகிழ்ச்சியோடு சென்றன.

மான்கள் ஒரு பாறையின் மீது டக்டிக்டிக்டிக்’ டக்கா டக்கா டக்டிக்டிக்டிக் என்று தமது குளம்பு களால் ஒலியெழுப்பிக் கொண்டு ஆடிவிட்டு நகர்ந்தன.

புலிகள் தமது மெத்தென்ற பாதங்களில் தத்தந்தின்னா ததின்னனா தத்தந்தின்னா ததின்ன? என்று நாட்டியமாடியவாறே சென்றன.

 யானையின் கால் மிகவும் பெரியதல்லவா ?

அதல்ை யானைகள் & தப் .திப் .தப் ...திப் ...தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/19&oldid=1295874" இலிருந்து மீள்விக்கப்பட்டது