பக்கம்:நாட்டிய ராணி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


ஏற்படாதா ? இது என்ன வாழ்க்கை ?.நாம் கொஞ் சம் ஜாலியாக இருக்கவேண்டும் ” என்று குரங்கு சொல்லிற்று.

 "அதென்னடா ஜாலி ? " என்று கேட்டது சிங்கம்.
 " ஒஹோ ! மறந்துவிட்டேன். நீங்களெல் லாம் காட்டுப்புறம். உங்களுக்கு இந்த வார்த்தை விளங்காது. நாம் கொஞ்சம் வேடிக்கையாக, குஷியாக, தமாஷாக இருக்கவேண்டும். அது தான் ஜாலி " என்றது குரங்கு. " அதற்கென்ன செய்யலாம் ? " என்று சிங்கம் ஆவலோடு கேட் டது. "மஹா ராஜா நீங்கள் இந்தக் காட்டிலுள்ள விலங்குகள் உயிரினங்கள் எல்லாவற்றையும் நான் சொல்லுவதை கேட்டு நடக்க உத்தரவு செய் யுங்கள். நான் இங்கே ஒரு தமாஷான சர்க்கஸ் ஏற்பாடு செய்கின்றேன் ” என்றது. "அதை யார் நடத்துவார்கள் ?" என்று சிங்கம் கேட்டது. " நான் தான் ரிங்மாஸ்ட்டராக இருந்து நடத்து வேன் " என்று குரங்கு சொல்ல விரும்பிற்று. ஆனால் அதற்கு ரிங்மாஸ்டர் என்ற பெயர் மறந்து போய்விட்டது. அதைப்பற்றி யோசனை செய் கின்றபொழுது ஏதோ ஒரு மரத்திலிருந்து " க்ரங், க்ரங்,க்ரங்"என்று ஒரு பறவை செய்யும் ஒசை காதில் விழுந்தது. உடனே குரங்கு, "நான் தான் குரங் மாஸ்டர் ; இதோ பாருங்கள் என் கச்சையிலே சாட்டையும் இருக்கின்றது. இந்தச் சாட்டையால் விலங்குகளின் முதுகில் லேசாகத் தட்டுவேன். அவைகளெல்லாம் நல்ல நல்ல வித்தைகள் செய்யும் ” என்று பதில் சொல்லிற்று.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/24&oldid=1295882" இலிருந்து மீள்விக்கப்பட்டது