பக்கம்:நாட்டிய ராணி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாட்டிய ராணி

ஒரு சின்ன ஆட்டுக்குட்டி ஒரு பண்ணையிலே இருந்தது. அதன் உடம்பிலே வெள்ளையும் கறுப்பும் பட்டை பட்டையாகப் பளபளவென்று அழகாகக் காணப்பட்டன. இந்த ஆட்டுக்குட்டி எப்பொழுதும் துள்ளிக் குதித்து பசு, எருமை, காளை ஆகிய எல்லாவற்றோடும் விளையாடிக் கொண்டே இருக்கும். காளை மாட்டோடு முட்டி முட்டிக் குறும்பு செய்யும். படுத்திருக்கும் ஒரு பெரிய எருமை மேலே ஏறிக் கொண்டு நடனம் ஆடும். எருமைக்கு அது முதுகைச் சொரிந்து விடுவது போல் இன்பமாக இருப்பதால் பேசாமல் படுத்திருக்கும். சில சமயங்களிலே தாய் ஆட்டின் மீது ஏறிக் குதித்து விளையாடும். தாய் ஆட்டிற்கு ஒரே மகிழ்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/6&oldid=1395408" இலிருந்து மீள்விக்கப்பட்டது