பக்கம்:நாட்டிய ராணி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இப்படி இந்தச் சின்ன ஆட்டுக்குட்டி துள்ளித் துள்ளிக் குதிப்பதைப் பார்த்து ஆடுமாடு மேய்ப்பவர்கள் இதற்கு நாட்டியராணி என்று பெயர் வைத்திருந்தார்கள்.

காலையிலே ஆடுமாடுகள் புல் மேய்வதற்காகக் கழனிகளுக்குச் செல்வது வழக்கம். பட்டி நாய்களும் அவற்றோடு பாதுகாப்புக்காகச் சென்று விடும். பண்ணையிலே யாரும் இருக்கமாட்டார்கள்.

ஆட்டுக்குட்டிகளையெல்லாம் ஒரு அறையில் ஓட்டி அந்த அறையைப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்கள். அதனால் குட்டிகளும் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் இருக்கும். மாலை வேளையில் ஆடுமாடுகள் பண்ணைக்குத் திரும்பிய சத்தம் கேட்டவுடனே குட்டிகள் ஒரே அடியாகக் கத்தத் தொடங்கிவிடும். காலையிலிருந்து மாலை வரை அடைபட்டுக் கிடந்தால் அவற்றிற்கு வயிறு பசிக்காதா என்ன ? அறையைத் திறந்துவிட்டவுடன் குட்டிகள் அவற்றின் தாய்களிடம் தாண்டிக் குதித்துச் சென்று பால் குடிக்கத் தொடங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/7&oldid=1354345" இலிருந்து மீள்விக்கப்பட்டது