தமிழகத்திலும், டெல்லியிலும் நடைபெறுகின்ற ஆட்சி தேசிய முன்னணி ஆட்சிகளாக இன்றைக்கு இருப்பதுதான் மிக முக்கியமான காரணமாகும். சரித்திரப் பிரகடனம் மலர்வதற்குக் காரணம் நமது தமிழகமே ! அதைப்போலத்தான் இன்றைக்கு மண்டல் கமிஷன் பரிந்து ரைகளை வி.பி சிங் அவர்கள் ஏற்று, அதை ஏழாம் தேதியன்று நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் ஒரு மாபெரும் சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரகடனமாக வெளியிட்டிருக்கிறார் என்றால் அந்த முடிவு அங்கே ஒளிவிடுவதற்கு-மலர்வதற்கு ஆதி காரணமாக இருந்ததும் இந்தியாவின் தென்கோடி முனையிலே உள்ள நம்முடைய தமிழகம்தான். மண்டல் குழு பரிந்துரைகளைத் தயாரித்த மண்டல் அவர்கள் குறிப்பிடுகிறார். Tamilnadu is the pioneer state in Communal Representation it has given representation for Backward classes வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடுதான் முன்னோடி யாக இருக்கிறது என்று மண்டல் அவர்கள் குறிப்பிட்டிருக் கின்றார்கள். இன்றைக்கு எனக்கு முன் பேசிய பேராசிரியரும், மற்ற வர்களும் எடுத்துக்காட்டியதைப்போல் நாம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கும் முன்னோடியாக இருந்து இன்றைக்கு டெல்லிப் பட்டணத்திலே ஆட்சி புரிகின்ற தேசிய முன்னணியின் தலைவர் மரியாதைக்கும், மதிப்பிற்கும். அன்பிற்கும், நம்முடைய பாசத்திற் கும் உரிய வி.பி சிங் அவர்களால் ஏற்றுககொள்ளப்பட்டு மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு, பாராளுமன்றத்திலே - மாநிலங் களவையிலே அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களால் வலுப் படுத்தப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கொள்கை. நான் 'வலுப்படுத்தப்பட்ட' என்று சொல்வதற்குக் காரணம், நீதிக்கட்சி காலத்திலேயே 1916,17,18 ஆம் ஆண்டுகளிலேயே இது முகிழ்த்து அதற்குப்பிறகு முத்தையா காலகட்டத்தில் அவர் அமைச்சராக 4
பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை