பொறுப்பேற்றிருந்தபோது அறிவிக்கப்பட்டு ஒரு நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது இந்த வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்பதாகும் உருவாகாத சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கொள்கை! உருவான அந்தக் சமு எனவேதான் தமிழகத்தில் -தென்னகத்திலே அந்தக் கொள்கை-நீதிக்கட்சி காலத்திலே உருவான கொள்கை, அது உருவானால்தான் உருவாகாமல்போன தாயத்தை உருவாக்க முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கொள்கை. அது உருவாகாமல் இருந்திருந்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிதிரா விடர்கள், பழங்குடிமக்கள்-இவர்களெல்லாம் மேலும் அடக்கப் பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு இந்தச் சமுதாயம் நாசமாய்ப் போனது என்ற முடிவுரை என்றைக்கோ எழுதப்பட்டிருக்கும். இடஒதுக்கீட்டுக்கு வந்த ஆபத்தைக் களைந்தது பெரியாரும்-அண்ணாவும்தான்! அதற்கு இடம் தராமல் இந்தப் பெரிய காரியத்தைத் தங்கள் மீது இழுத்துப் போட்டுக்கொண்டு நீதிக்கட்சியின் தலைவர்கள் அன்றைக்கு வாதாடினார்கள், போராடினார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் கொள்கைக்கு ஆபத்து வராமல் பாது காத்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் உரியதாகும். அண்ணா அவர்களுடைய காலத்திற்குப்பிறகு, பெரியார் அவர்களுடைய காலத்திற்குப்பிறகு இந்தச் சமூக அடிப்படை- கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்று இருந்த நிலைகூட இடைக்காலத்திலே வந்த அரசால் மாற் றப்படக் கூடிய ஒரு சூழ்நிலை வந்து பொருளாதார அடிப்படைக்கு அந்தத் தத்துவம் கூறப்பட்டபோது அதை வேகமாக எதிர்த்தது தி.மு கழகமும், திராவிடர் கழகமும் என்பதை வரலாறு மறந்துவிட முடியாது. நமது குருதி ஓட்டத்தோடு ஊறிப்போன கொள்கை! அந்த எதிர்ப்பின் காரணமாகத்தான் இடையில் வந்த ஆபத்து களையப்பட்டது. அப்படிக் களையப்பட்ட ஆபத்திற்குப் பிறகு தி.மு.கழக ஆட்சி 89-ல் மீண்டும் உங்களால் அமர்த்தப்பட்ட 5
பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை