பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில குறைபாடுகள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட் டோருக்கு ஒதுக்கப்பட்டவைகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் களுக்குக் கிடைக்காமல் அவர்கள் இன்றைக்கு அவதிப்படுகிறார்கள் எனவே அந்த விகிதாச்சாரம் 50 என்பதில் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்படவேண்டும் என்ற குரலை மதித்து, நம்முடைய குருதி ஓட்டத்தோடு ஊறிப் போன கொள்கை அது என்ற காரணத்தால் அந்தக் குரலை அலட்சியப்படுத்தாமல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் வன்னிய சமுதா யத்தினர், சீர்மரபினர் இவர்களை உள்ளடக்கிய அந்தச் சமுதாயத் திற்கு இருபது சதவிகிதம் என்று ஒதுக்கியதன் காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் 23 இடத்தைப் பெற்ற வன்னிய மாணவர்கள் கடந்த ஆண்டு 76 இடத்தைப் பெற்றவர்கள். இந்த ஆண்டும் 76 இடத்திற்கும் மேல் பெற்றிருக் கின்றார்கள். கழக ஆட்சி அகலவேண்டுமென அரைவேக்காடுகள் சில கூச்சல் போடுவது ஏன்? எனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பதிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பிரிவை உதாசீனப்படுத்தாமல் அவர்களையும் கைதூக்கிவிடவேண்டும். என்பதற்காக இந்த இருபது சதவிகிதத்தை நாம் அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி கண்டது மாத்திரம் அல்ல, இந்த ஆண்டு எந்த வகுப்பிலே பிறந்தவர்களாக இருந்தாலும் நாம் இதுவரையில் சமூக அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் கல்வி இவைகளிலே இடஒதுக்கீடு செய்கிறோம். பட்டதாரிகளே இல்லாத குடும்பமாக இருந்தால் அந்தக் குடும்பம் அக்ரகாரத்துக் குடும்பமாக இருந்தாலும், ஆதிதிராவிடர் வீட்டுக் குடும்பமாக இருந்தாலும், அது வன்னியர் வீட்டுக் டுகும்பமாக இருந்தாலும், தேவர், யாதவர் வீட்டுக் குடும்பமாக இருந்தாலும், எந்தப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப் பட்ட அல்லது மேல்மட்ட ஆக எந்தக் குடும்பமாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ அல்லது பெற்றோர்களோ பட்டம் பெறாமல் இருப் பார்களேயானால் அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலாக வரும் மாணவன் மருத்துவக் கல்லூரியிலே சேர வேண்டுமேயானால், பொறியியற் கல்லூரியிலே சேர வேண்டுமேயானால், விவசாயக் கல்லூரியிலே சேர வேண்டுமேயானால், சட்டக் கல்லூரியிலே சேர வேண்டுமேயானால், அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக 6