பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருபவருக்கு 5 மார்க் அதிகமாகக் கொடுக்கவேண்டும் என்கின்ற ஒரு ஆணையைப் பிறப்பித்தது இந்தியாவிலே தமிழ் நாட்டிலே உள்ள தி மு.கழக ஆட்சிதான். இதற்காகத்தான் நாம் வெளியே போகவேண்டும் என்று சிலபேர் நமைச்சல் எடுத்துத் திரிகிறார்கள் அதுமாத்திரமல்ல, அந்தக் குடும்பமும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற குடும்பமாக இருந்தால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள ஆதிதிராவிடர்க் குடும்பமாக இருந்தால் அந்தக் குடும்பத்தில் ஆண்டு வருமானம் 12 ஆயிரம் உள்ள ஆதிதிராவிடர்க் குடும்பமாக இருந்தால், அந்தக் குடும்பத்தில் யாருமே பட்டதாரி யாக இல்லாமல் வருகின்ற முதல் பட்டதாரி மாணவன் தொழிற் கல்வியைப் படித்து முடிக்கிற வரையில் அது எம்.பி.பி.எஸ்.சாக இருந்தாலும், எஞ்சினியரிங் கல்லூரியாக இருந்தாலும், சட்டக் கல்லூரியாக இருந்தாலும், விவசாயக் கல்லூரியாக இருந்தாலும் அந்தப் படிப்பு முடிகிற வரையில் இலவசக் கல்வி என்று அறிவித் திருப்பதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான். அதற்காகத்தான் நாம் ஆட்சியைவிட்டு அகலவேண்டும் என்று சில அரசியல் அரைவேக்காடுகள் பேசுகின்ற காட்சியை நீங்கள் காணுகின் றீர்கள். ல இவைகளின் தொடர்பாக இவற்றின் பாதிப்பாகத்தான் அகில இந்தியாவிலே சில மாநிலங்களில் இந்த அளவிற்கு வேகமாக புரட்சிகரமாக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஓரளவு சலுகைகள், உரிமைகள் கடந்த காலத்தில் படிப்படியாக, கொஞ்கம் கொஞ்சமாக வேகமாக இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல இன்றைக்கு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியா முழுமையும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புக்களில் - மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களில், வேலை வாய்ப்புக்களில் அவர்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்று நாம் போராடி வருகிறோம். 73-ஆம் ஆண்டு மாநாட்டில் நான் எழுப்பிய குரல்! 1973-ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டிற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே நான் தமிழிலே பேசினேன். இந்தியிலே மொழிபெயர்க்க சந்திரகாந்த் என்ற சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் அங்கே வந்திருந்தார். அவர் என்னுடைய பேச்சை மொழி பெயர்த்தார். பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அன்றைக்கு சரண்சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். 7