பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரஜித் யாதவ் போன்ற கொண்டார்கள். நான் தலைவர்களெல்லாம் கலந்து அந்த மாநாட்டில் பேசும்போது சொன்னேன் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென்று இத்தனை சதவிகிதம் என்று இடஒதுக்கீடு இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புத் துறையில் இருக்கிறது. ஆனால் வேலை வாய்ப்புத் துறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற அந்த உரிமையை அந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு சார்புடைய வேலை வாய்ப்புக்களில் இன்றைக்குப் பெற முடியவில்லை. எனவே அதற்கு மத்திய அரசு வழிவகை காண வேண்டும் என்கின்ற வேண்டுகோளை அந்த மாநாட்டிலே நான் விடுத்தேன். அதற்கு நான்தான் மூலகர்த்தா என்று பெருமை யடித்துக்கொள்ள பேராசிரியரோ எதைப் பேசினாலும் அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது பெரியாரின் கொள்கை பேரறிஞர் அண்ணாவின் லட்சியம் என்பதை மறந்துவிட்டுப் பேசுகின்ற ஆணவக்காரர்கள் அல்ல நாங்கள் எங்களுக்கு இருக்கிற ஆணவமே பெரியாரின் கொள்கையை அடிப்படையாக வைத்துப் பேசுகிறோம், அண்ணா வின் லட்சியத்தின் அடிப்படையில் பேசுகிறோம் என்கின்ற ஆணவமே தவிர நாங்களேதான் இதைப் பேசுகிறோம் என்கின்ற ஆணவம் கிடையாது. நான் இதைச் சொல்லவில்லை. நானோ, 9 அன்றைக்கு இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னேன். தீர்மானங்கள் கழகச் செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்டன. கழக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது அதற்குப் பிறகு 1977-ஆம் ஆண்டு அன்றைக்கு ஜனதா ஆட்சி இந்தியத் துணைக்கண்டத்தில் நிறுவப்பட்டபோது மண்டல் கமிஷன் ஒன்றை நியமித்து அறிக்கை வெளியிடப்பட்டது. 20-12-78-ல் மண்டல் கமிஷன் நியமிக்கப்படும் என்கின்ற அறிவிப்பு வெளிவந்தது. அந்த அறிக்கை தயாரித்து முடிக்கப்பெற்று 31-12-80 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் தரப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட நாம் நடத்திய போராட்டங்கள்! அதற்கிடையில் ஜனதா ஆட்சி வீழ்ந்துவிட்ட காரணத்தால் 80-ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடத்தில் 31-12-80-ல் மண்டல் கமிஷன்பரிந்துரை அறிக்கை தரப்பட்டது. 8