பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி தரப்பட்ட அறிக்கை இரண்டாண்டு காலம் கழித்துதான் 30-4 82-ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவே இரண்டாண்டு ஆனது. அவ்வளவு தயக்கம் இந்த அறிக்கை தேவைதானா என்கின்ற மயக்கம். எனவே அறிக்கை வைக்கப்படவில்லை. அறிக்கையை பாராளுமன்றத்தில் வைப்பதற்கே நாம் இங்கு பல மாநாடுகள் கூட்ட வேண்டி யிருந்தது. டெல்லிக்குச் சென்றேபல போராட்டங்களை நாம் நடத்த வேண்டிருந்தது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் டெல்லி சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவ்வளவு பெரிய போராட்டத்திற்குப்பிறகு 82-60 நாடாளு மன்றத்தில் மண்டல் குழு பரிந்துரை அறிக்கை வைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த எட்டாண்டு காலம் எத்தனையோ முறை நாம் குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் பேசி னோம். நாடாளுமன்றத்தில் இதற்காக நம்முடைய தீர்மானங் களையே கொண்டு வந்தோம். மசோதாக்களையே முன்வைத் தோம். சட்டப்பேரவையில் அதைப்பற்றிப் பேசினோம். தி.மு.கழக மாநாடுகளில் தீர்மானங்களை வடித்தெடுத்து அவற்றினை அனுப்பிவைத்தோம். இந்திரா காந்தியை சந்திக்கும்போது கேட்டோம். ராஜீவ் காந்தியைச் சந்திக்கும்போது கேட்டோம். அதற்குபிறகு 89-ல் தி மு கழக ஆட்சி வந்தது. அந்த ஆட்சி வரு வதற்குமுன் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுகின்ற அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய வலியுறுத்திப் போராடுவோம் என்று சொன்னோம். தேர்தல் அரசை அறிக்கையில் வென்றோம். அதற்குப்பிறகு தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிட முன்வந்தது. தேசிய முன்னணி தேர்தல் பிரகடனம் தயாரித்தபோது அதில் மண்டல் குழு அறிக்கையை நாங்கள் அமல்படுத்துவோம் என்கின்ற வாசகம் இணைக்கப்பட்டது. தேசிய முன்னணி அரசு அமைந்தது. அது அமைவதற்கு முன்பு 89-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.கழக அரசின் சார்பில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு ராஜீவ காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது ராஜீவ் காந்தியால் குப்பைக் கூடையில் தூக்கி போடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தேசிய முன்னணி ஆட்சிக்கு நினைவூட்டி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு உரையாற்றினேன். 9