பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு - எல்லா முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் ஒருவன்தான் - என்னுடைய பேச்சில் தான் 'மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற இனியும் தாமதம் செய்யாதீர்கள்' என்று குறிப்பிட்டேன். அதற்குப் பிறகு மண்டல் குழுவிற்கு பரிந்துரைகளை நிறை வேற்றுவதற்கு ஒரு கமிட்டி போடப்பட்டு அதற்கு துணைப் பிரதமராக இருந்த தேவிலால் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நானும் தம்பி மாறனும் தேவிலால் அவர்களைச் சந்தித்து அந்தக் கமிட்டியைப் பற்றி விசாரித்தோம். அவர் சொன்னார், "மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற நாங்கள் தயங்கவில்லை. ஆனால் இதை எந்தெந்த சாதிப் பிரிவுகளை சேர்ப்பது, என்பதில் தயக்கம் இருக்கிறது. எனவேதான் நாங்கள் இதை உடனடியாக அறிவிக்க முடியாமல் தாமதிக்கிறோம்” என்று சொன்னார். நான் அவரிடத்திலே "இதற்கு நீங்கள் கஷ்டப் படத் தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்ற சாதிப் பட்டியல் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் யார் என்ற பட்டியல் அந்தந்த மாநிலத்திலே இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலப்பட்டியலை வாங்கி அதற்கு ஏற்றவாறு அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற முன் வாருங்கள் என்று சொன்னேன். தேவிலால் "இது நல்ல யோசனை" சொன்னார், என்று ஆனால் அதற்குப் பிறகும் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் பிரதமரை சந்தித்து உடனடியாக இதை நிறைவேற்ற தி.மு.கழகம் சார்பில் கேட்டுக் கொண்டோம். நம்முடைய செயற்குழு, பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். இதன் விளை வாக இன்றைய தினம் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடை முறைக்கு வரக்கூடிய பரிசு இந்த விடுதலை நாளையொட்டி நமக் கெல்லாம் கிடைத்திருக்கிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நாம் வலியுறுத்த காரணமென்ன? மண்டல் கமிஷனை நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஆலடி அருணா இங்கே பேசும்போது சில புள்ளி விவரங்களை மேல் எழுந்த வாரி யாக கோடிட்டுக் காட்டினார். 10