பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் உங்களுக்குச் சிலவிவரங்களைச் சொல்ல விரும்புகிறேன். இதற்குப் பிறகாவது மண்டல் குழு பரிந்துரைகளை நிறை வேற்றுவது நியாயம்தானா அல்லவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நடுநிலையாளர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். எனக்குள்ள சங்கடமெல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக் காக செய்யக்கூடிய காரியங்களை முன்னேறிய மக்கள் எதிர்த்தால் பரவாயில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்களே என்பதுதான். அதுதான், எனக்குள்ள கவலை. சிலபேர் கேட்பார்கள். பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு இவ்வளவு காரியம் செய்கிறாயே அவர்கள் அத்தனை பேரும் உன்னை ஆதரிக் கிறார்களா, இதைப் புரிந்து கொள்கிறார்களா என்று கேட்பார்கள். நான் சொல்கிறேன் அவர்களுக்கு - இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால்தானே அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக் கிறார்கள். (கைதட்டல்) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தாழ்ந்து கிடக்கிறார்கள். எனவே அவர்களைக் குற்றம் சொல்லி பயன் இல்லை. குற்றம் நம்மீதுதான். நாம் இன்னும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய அளவிற்குச் சொல்ல வில்லை. அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய அளவிற்கு தெளிவு படுத்தவில்லை. எனவே நாம் ஆற்ற வேண்டிய பணி இன்னும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமே யல்லாமல் அவர்களைச் சொல்லிப் பயன் இல்லை. எனவேதான் இந்த விவரத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மத்திய அரசில் மண்டல் கமிஷன் நியமிக்கப்பட்ட நேரத்தில் மண்டல் அவர்களும், அந்தக் குழுவும் எடுத்த கணக்கை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம்: புள்ளிவிவரத்தைப் பாருங்கள்! மத்திய அரசில் பாதுகாப்புத் துறை. அதிலே கிளாஸ் ஒன்று என்ற பிரிவில் உள்ள அதிகாரிகள் எத்தனை பேர் அந்தப் பதவியில் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மொத்த அதிகாரி கள் அலுவலாளர்கள் 1379 பேர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நான் வீரர்களைச் சொல்லவில்லை. சிப்பாய்களைச் சொல்ல வில்லை அவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர் களாக இருப்பார்கள். அங்குள்ள அலுவலாளர்கள் 1379 பேரில் உயர் ஜாதிக்காரர்கள் 1322 பேர். தாழ்த்தப்பட்டவர்கள் 48 பேர். பிற்படுத்தப்பட்டவர்கள் 9 பேர். 11