பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புத்துறை - அதிலே அலுவலர் மொத்தம் 1379. அதில் உயர் ஜாதிக்காரர்கள் 1322 பேர், தாழ்த்தப்பட்டவர்கள் 48 பேர், பிற்படுத்தப்பட்டவர் 9 பேர். ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருபத்தி இரண்டரை சதவிகிதம் இருக்கிறது. அதன்படி அவர்களுக்கு கிடைக்க வேண் டிய எண்ணிக்கை 310. அது கூட கிடைக்காமல் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது வி.பி.சிங் அறிவித்திருக்கிற 27 சதவிகிதப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கிடைக்க வேண்டிய இடம் 372 கிடைத்திருக்கிற இடம் 9 தான். இனிமேல் கிடைக்கப் போகிற இடம் 372. வயிறு எரியுமா ? எரியாதா? இது வரையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு (பலத்த கைதட்டல், ஆரவாரம்). அதே பாதுகாப்புத் துறையில் கிளாஸ் 2 அதிகாரிகள் பதவி மொத்த அலுவலர் 7752 பேர். அதில் உயர் ஜாதிக்காரர்கள் 6762 பேர். தாழ்த்தப்பட்டவர்கள் அவர்கள் விகிதாச்சாரப்படி இருக்க வேண்டியவர்களே 1774 பேர் இருக்க வேண்டும். ஆனால் இருக்கிற எண்ணிக்கை 803, பிற்படுத்தப்பட்டவர்கள் இன்றைக்கு வி பி சிங் அறிவித்திருக்கிற விகிதாச்சாரப்படி இடம் பெற வேண்டியவர்கள் 2093. ஆனால் இடம் பெற்றிருப்பவர்கள் 187. கிளாஸ் III, கிளாஸ் IV பாதுகாப்புத் துறையில் உள்ள அலுவலர்கள் மொத்த அலுவலர் 2177. அதிலே உயர் ஜாதிக் காரர்கள் 1392. பிற்படுத்தப்பட்டோர் 131. தாழ்த்தப்பட்ட வர்கள் 604 அவர்களுக்குக் கிடைக்கவேண்டியது 470 என்றாலும் 604 கிடைத்திருக்கிறது. காரணம் அது மூன்றாம் கிளாஸ், நான்காம் கிளாஸ். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்ல, அதிலே கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 131 இடம்தான் கிடைத் திருக்கிறது. இன்றைக்கு இருக்கிற இடஒதுக்கீடு அன்றைக்கு இருந்திருந்தால் 574 இடம் கிடைத்திருக்க வேண்டும். பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் சேர்ந்து மொத்தம் 11258 பேர் அதிலே உயர் ஜாதிக்காரர்கள் 10476 பேர். தாழ்த்தப்பட்டோர் 1455 பேர் பிற்படுத்தப்பட்டோர் 327 பேர். மண்டல் கமிஷன் தேவையா இல்லையா? (குழுமியிருந்த மக்கள் தேவை தேவை என குரல்) மத்திய அரசின் நிதித் துறையில் கிளாஸ்-1 அதிகாரிகள் மொத்தம் 1008 பேர். அதில் உயர் ஜாதிக்காரர்கள் 941 பேர். தாழ்த்தப்பட்டோர் 66 பேர். அவர்களுக்கு ஏற்கனவே இருக்கிற 12