பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகிதாச்சாரப்படி இருபத்தி இரண்டரை சதவிகிதப்படி 227 இருக்க வேண்டும். கொடுக்கப்படவில்லை. 66 தான் அவர்களுக்கு பிற் படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் தெரியுமா ? ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு! நான் வேடிக்கைக்காக இதைச் சொல்லவில்லை. நான் கேட்கிறேன். சமுதாயத்தின் கண்ணைப் பெயர்க்கின்ற முயற்சியல்லவா இதுவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை மாற்றி அமைக்க மண்டல் கமிஷன் தேவையா? இல்லையா? (தேவை! தேவை!! என குரல்) ற அதே நிதித்துறையில் கிளாஸ் - II அதிகாரிகள் மொத்தம் 2824 பேர். அதில் உயர் வகுப்பினர் 2507 பேர், தாழ்த்தப் பட்டோர் கொஞ்சம் அதிகம் 306 பேர். பிற்படுத்தப்பட்டோர் 11 பேர். இன்றைக்கு வி.பி.சிங் அறிவித்திருக்கிற பரிந்துரை நிறை வேறுமேயானால் 767 பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இடம் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட மக்களே உங்களை கேட்கிறேன். மண்டல் கமிஷன் தேவையா இல்லையா ? நிதித்துறையில் கிளாஸ்-[1 கிளாஸ்-IV மொத்தம் 821 பேர் உயர் ஜாதி 606, தாழ்த்தப்பட்டோர் 202 பேர். பிற்படுத்தப்பட்டோர் 13 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயமே உன்னைக் கேட்கிறேன். மண்டல் கமிஷன் தேவையா இல்லையா? (தேவை, தேவை என மக்கள் குரல்) இவ்வளவு ஈனஸ்வரத்திலே சொன்னால் இன்டியன் எக்ஸ்பிரஸ் காதிலே விழாது. (தேவை! தேவை!! என ஓங்கி ஒலிக்கிறது கூட்டத்தின் குரல்). செய்தித் துறையில் மொத்தப் பணியாளர்கள் 16505 பேர். உயர் ஜாதிக்காரர்கள் 11498 பேர். தாழ்த்தப்பட்டோர் 3660 பேர். விகிதாச்சாரப்படி 3714 பேர் இருக்க வேண்டும். இருப்பது 3660. பிற்படுத்தப்பட்டவர்கள் 1347 பேர்தான். திட்டத்துறையில் மத்திய அரசின் மொத்தப்பணியாளர் 6917 பேர். உயர் ஜகதிக்காரர்கள் 4582 பேர். தாழ்த்தப்பட்டோர் 1556 பேர் இருக்க வேண்டும். இருப்பது 977 பேர். பிற்படுத்தப் பட்டோர் 1868 பேர் இருக்க வேண்டும். ஆனால் அன்றைய விழுக்காட்டுப்படி இருப்பது 358 பேர். சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்தின் துறையில் மொத்தப்பணியாளர் 9185 பேர். உயர் ஜாதிக்காரர்கள் 6463 பேர் பிற்படுத்தப்பட்டோர் 541 பேர். குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் மொத்தப்பணியாளர்கள் 307 பேர். அதிலே உயர் ஜாதிக்காரர்கள் 260 பேர். தாழ்த்தப் 13