கள் முன்னணி அரசுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். இங்கே தமிழ் நாட் டிலே நடைபெறும் தி.மு கழக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம். ஆகவே கிளர்ச்சி நடத்த வாருங்கள் என்று எழுத வேண்டியதை யெல்லாம் எழுதிவிட்டு இறுதியாக வன்முறைக்கு இடம் தராதீர் என்று வன்முறையையும் ஞாபகப்படுத்துகின்ற வகையில் தலையங்கம் தீட்டியிருப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பேராசிரியர் இங்கே குறிப்பிட்டதைப்போல எங்களுக்கு பதவி பெரிதல்ல கொள்கை பெரிது. ஆட்சி பெரிதல்ல அய்யாவும், அண்ணாவும் வகுத்துத்தந்த சமூக நீதியைக் காப் பாற்றுவதுதான் பெரிது (பலத்த கைதட்டல்) இந்த சமூக நீதியை காப்பாற்றுகின்ற போர் வீரர்களாக நாங்கள் இருப்போமேயல்லா மல், சமூக நீதியை வெட்டிப் புதைத்துவிட்டு தலையிலே கிரீடத்தை வைத்துக் கொண்டு கோணங்கிகளாக கோட்டை யிலே கொலு வீற்றிருக்க நாங்கள் என்றைக்கும் தயாராக இல்லை. (கை தட்டல்) இதில் நாங்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆட்சி பறிபோய் விடலாம். போனால் என்ன? கட்டபொம்மனாகத்தான் நாங்கள் வாழ்வோம்! கட்டபொம்மன் கூட செத்தான் தூக்கிலே தொங்கவிடப் பட்டான். இன்றைக்கு கட்டபொம்மன் பெயர்தான் ஞாபகத்தில் இருக்கிறது. கொள்கைக்காகச் செத்தான் கட்டபொம்மன். இன்றைக்கும் வரலாறு அவனை மறக்கவில்லை. அவன் எதிர்த்த வெள்ளைக்காரனின் பெயர் பலபேருக்குத் தெரியாது. ஆனால் கட்டபொம்மனின் பெயர் இங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். அவனைத் தூக்கு மாட்டியவன் யார்? என்று கேட்டால் சில பேருக்குத்தான் தெரியும். எல்லோருக்கும் தெரியாது. அதைப்போல நாங்கள் கட்டபொம்மனாக வாழ விரும்பு கிறோமேயல்லாமல் எட்டப்பனாக வாழவிரும்பவில்லை என்பதைத் தெரிவித்து, இந்த விடுதலைநாளில் நமக்கு சமூக விடுதலையும் கிடைத்திருக்கிறது என்பதற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் னார்கள். உரையாற்றி இமிழ் 15 தகர், நூல் 52263 விருத்தாசலம்* 608 001.
பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை