இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்நூல். மண்டல் குழுவின் பரிந்துரைகளைப் பற்றிய வரலாற்றின் காலகட்டங்களை இந்நூல் வெளிப் படுத்துகிறது. சமத்துவ சமுதாயத்தை நிலைபெறச் செய்யவும் சமூகநீதியை உறுதிபடுத்தவும் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் பல்லாண்டு காலமாகப் போராடி வந்திருக்கின்றன. தலைவர் கலைஞர் அவர்கள் மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் தெளிவாகக் கூறியுள்ளார். மண்டல் குழுவின் பரிந்துரைகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய, தலைவர் கலைஞரின் கொள்கை வழியான கருத்துக்களை இச்சிறு வெளியீட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். என். செல்வேந்திரன் வெளியீட்டுச் செயலாளர், தி.மு.க.