பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் காப்பக்கு 100 608 நகர், விருத்தாசலம் - நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் 44-வது விடுதலை நாள் விழா மற்றும் மண்டல் கமிஷன் வெற்றி விழாப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- இந்த மண் மீட்கப்பட்ட விடுதலைநாள் விழாவை ஆண்டுதோறும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற நாம் இன்றைய தினம் சமூக விடுதலை வாய்த்தது என்பதையும் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வகையில் சிங்காரவேலர் திடலில் வெள்ளம்போல் குழுமியிருக்கின்றோம். பேராசிரியர் அவர்களும், கழகத்தின் முன்னோடிகளும், விடுதலைநாள் விழாவில் நாம் பெரிதும் பூரிப்பு அடைகிற வண்ணம் மண்டல்குழு பரிந்துனீரகளை மத்தியஅரசு ஏற்றுக் கொண்டுள்ள வெற்றிச் செய்தி குறித்து விளக்கவுரை ஆற்றிச் சென்றிருக்கிறார்கள். கழகத்தின் நடவடிக்கைகளை அகில இந்தியாவும் கூர்ந்து நோக்குகிறது ! தி.மு.கழகம் தனக்கென சில முக்கியமான லட்சியங்களை, கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்ட ஓர் பேரியக்கம். மாநில