அளவிலே அதன் பணி பரவலாக நடைபெற்றாலும்கூட இந்த மாநிலத்திலே தி.மு.கழகம் இயக்க ரீதியாக ஆற்றுகின்ற பணி யானாலும் அல்லது கழகம் அரசுப் பொறுப்பேற்று, அந்த அரசின் வாயிலாக மேற்கொள்கிற பணியானாலும் அவை மாநில அளவிலே நின்றுவிடாமல் மற்ற மாநிலங்களிலும் மாநிலங்களிலும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் இந்தியத்துணைக் கண்டம் முழுமையும் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது என்பதையும், அதன் காரணமாக தி.மு கழகம் ஒரு மாநிலக் கட்சி என்றாலும்கூட அதனுடைய நடவடிக்கைகளை- திட்டங்களை-அதன் கொள்கை களை - குறிக்கோள்களை அகில இந்திய தலைவர்கள், உள்ள அளவிலே கட்சிகள் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்த அடிப்படையிலே பார்த்தால் நாம் கழக ஆட்சியில் இந்த மாநில அளவிலே மேற்கொண்ட சில முடிவுகளை அகில இந்திய அளவிலே நம்முடைய வழிகாட்டுதலாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியிருக்கின்ற செய்திகளைச் சொல்ல முடியும். கழக ஆட்சியில் அறிஞர்அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது மே நாள் விடுமுறை, நபிகள் நாயகம் பிறந்தநாள்விழா விடுமுறை விடுமுறை இவைகளை ஆணை பிறப்பித்து அறிவிக்கவில்லை. அவைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று அண்ணா அவர்கள் கூறினார்கள். அந்த விடுமுறை நாட்கள் ஊதியத்தோடு கூடிய விடுமுறை நாட்களாக அப்போது அறிவிக்கப்படவில்லை. அண்ணா அவர்களுடைய மறை விற்குப்பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட நான் மேநாள் சம்பளத் தோடுகூடிய விடுமுறை நாளாக தமிழகத்திலே இனி பிடிக்கப்படும் என்று அறிவித்தேன். கடை அதைப்போலவே நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழாவும் சம்பளத்தோடுகூடிய விடுமுறை நாளாக-அரசு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தேன். தி.மு.கழக சார்புடைய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பல்வேறு மாநாடுகளை நடத்திய நேரத்தில் தமிழகத் திலே மே தினத்திற்கு விடுமுறை விடப்படுவதுபோல் இந்தியா முழுமையும் மேநாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானங்களைத் தொடர்ந்து நிறைவேற்றியதுண்டு. ஆனால் அந்தத் தீர்மானங்கள் - அந்த வேண்டுகோள் அன்னை இந்திரா 2
பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை