காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்கப்படவில்லை. பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டு ஆண்டபோதும் லட்சியம் செய்யப்படவில்லை. அகில இந்திய அளவில் நடைமுறைக்கு வரும் தமிழகத்து முடிவுகள்! தேசிய முன்னணி அரசு அமைந்து நம்முடைய அன்புக்கும் பாசத்திற்கும் உரிய வி.பி.சிங் அவர்கள் பிரதமராக பொறுப் பேற்றுக்கொண்ட நிலையில் இந்த ஆண்டு மேதினம் வருகிற நேரத்தில் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் வரதராஜன் விடுத்த வேண்டுகோளை ஏற்று. மேதினத்தில் இங்கே மேதினச் சின்னம் ஒன்று நிறுவவேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அலட்சியப்படுத்தாமல் மேதினச் சின்னம் ஒன்றை பல லட்சம் செலவில் நிறுவி அது நிறுவப்பட்ட நேப்பியர் பூங்காவின் பெயரையும் 'மே தினப் பூங்கா' என்று அறிவித்ததோடு, அதற்கு சில நாட்களுக்கு முன்பு மாநிலங்கள வையிலே பேசச் சென்ற தம்பி கோபால்சாமியிடத்தில், "நீங்கள் பேசும்போது தமிழ்நாட்டில் மேதின விடுமுறை இருப்பதுபோல் இந்தியா முழுமையும் மேதின விடுமுறை தேவை என்பதை வலியுறுத்துங்கள் " என்று கூறி தம்பி கோபால்சாமி மாநிலங்கள வையிலே அதை வலியுறுத்திப் பேசியபோது உடனடியாக மத்திய அரசு- பிரதமர் வி.பி சிங் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு தமிழகத்திலே மே தினத்திற்கு விடப்பட்ட சம்பளத்தோடுகூடிய அந்த விடுமுறை இனி இந்தியா முழுமைக்கும் உண்டு என்று தேசிய முன்னணி, அரசால் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ளது. அதைப்போலவே, தமிழகத்தில் மாத்திரம்தான் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா கழக ஆட்சிக் காலத்தில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றைக்கு தொலைச் காட்சியிலே நான் செய்தி கேட்டேன். இன்று காலையிலே தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இனி இந்தியா முழுமையும் நபிகள் நாய்கம் பிறந்தநாள் விழா அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். எனவே, தமிழகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அகில இந்திய முடிவுகளாக இன்றைக்கு மேற்கொள்ளப்படுகின்றன என்றால் 3
பக்கம்:நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை