பக்கம்:நான்மணிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

திருவொக்கும் தீதில் ஒழுக்கம், பெரிய அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் - பிறனைக் கொலையொக்கும் கொண்டுகண் மாறல், புலை யொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. (6)

கள்வமென் பார்க்குந் துயிலில்லை, காதலிமாட் டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை - ஒண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை, அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில். (7).

கற்றார்.முற்றோன்றா கழிவிரக்கம், காதலித்தொன் றுற்றார்முற் றோன்றா உறாமுதல் - தெறாரென அல்ல புரிந்தார்க் கறந்தோன்றா, எல்லாம் வெகுண்டார் முற் றோன்றா கெடும். (8)

நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும் குளத்துக் கணியென்ப தாமரை - பெண்மை நலத்துக் கணியென்ப நாணம், தனக்கணியாம் தான்செல் லுலகத் தறம். (9)

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை நயத்திற் பிணித்து விடல். 10),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/11&oldid=1355019" இலிருந்து மீள்விக்கப்பட்டது