பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இது ஒர் உண்மையைப் புலப்படுத்திற்று. அது என்ன? அங்கு அரசாங்க ஊழியர்களும் ஆசிரியர்களும் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் ஆகலாம்; கட்சி வேலைகளில் ஈடுபடலாம் என்று தெரிந்துகொண்டோம். இதனால் சிக்கல்களும் தர்ம சங்கடங்களும் நேரிடாதா என்று கேட்டோம். எங்கள் நாட்டில் ஒரே கட்சி. அதுவே பொதுவுடைமைக் கட்சி. எதிர்க் கட்சியும் இல்லை: எதிரிக் கட்சியும் இல்லை. ஆகவே விரும்பினால், உள்ள ஒரே கட்சியான பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபடலாம். விரும்பாவிட்டால் சும்மா இருக்கலாம். பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினர் என்பதற்காக, ஊழியர்களையோ ஆசிரியர்களேயோ விரட்டுவதற்கும் மிரட்டுவதற்கும் வேறு கட்சியேது? என்றார்.
பேச்சு அரசியல் பக்கம் திரும்பிவிடக் கூடாதே என்பது எங்கள் கவலை. பள்ளிக்கூட வயது என்பது எப்போது தொடங்குகிறது' என்று பேச்சை மாற்றினோம். ஆறு வயது முடிந்ததும் என்றார். அது வரையில் குழந்தைகள் துள்ளித் திரிய வேண்டியதா என்றோம். இல்லை! பாலர் பள்ளிகள் உள்ளன. 2,500 உள்ளன. அவற்றில் சேர்ந்துவிடுவார்கள் என்றார்.
பாலர் முதல் பாட்டிகள் வரை அறிவு பெறுவ தற்கு உள்ள வாய்ப்புகளைத் தெரிந்து கொண்டோம். குடும்பத்தில் இருக்க முடியாத குழந்தைகளுக்கு வழியென்ன? அவர்களுக்கு உறையுள் பள்ளிகள் உள்ளன. உஸ்பெகிஸ்தானில், அத்