பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

-தகைய பள்ளிகள் 140 உள்ளன. அவற்றில் சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை 40,000. முதல் வகுப்பு முதலே ‘உறையுள் பள்ளியில்’ சேரலாம். அங்கு உணவு, உறையுள், உடை , கல்வி இத்துணையும் கிடைக்கின்றன.

உறுப்புக் குறையுடையோருக்கும் தனிப் பள்ளிகள் உள்ளன. ஊமையர், செவிடர், பார்வையிழந்தோர், மூளையில் இளைத்தோர் ஆகிய மாணவர்களுக்காகப் பதினேழு பள்ளிகள் உள்ளன.

இத்தனை கல்வி நிலையங்களையும் நடத்தும் ஆசிரியர் படை பெரும்படையோ? ஆம். 90,000 ஆசிரியர் ஆசிரியைகள் உஸ்பெகிஸ்தான் குடியரசில் பணியாற்றுகின்றனர். என்ன ? பதினாறு இலட்சம் மாணவ மாணவிகளுக்குத் தொண்ணுாறு ஆயிரம் ஆசிரியர் ஆசிரியைகளா என்று மூக்கில் விரலை வைக்காதீர்கள். நாங்கள் அப்படிச் செய்தோம். சிரித்துவிட்டார்கள். ஆசிரியருக்கு இருபது மாணவர்கள் கூட ஆகவில்லையே என்று கேட்டோம். ‘கல்விக்கூடம் எதற்கு?’ என்று கேட்டார். ‘கற்றுக்கொடுக்க’ என்பது பதில்! யாருடைய பதில்? எங்கள் பதில் அன்று. முன்னாள் ஆசிரியராகிய கல்வி அமைச்சரே பதில் கொடுத்தார். ‘கற்றுக் கொடுக்க’ ஒவ்வொரு மாணவனையும் உற்று நோக்க வேண்டாவா? ஒவ்வொருவனுடைய எழுத்து வேலைகளையும் கவனித்து வரி வரியாகத் திருத்த வேண்டாவா? அப்படிச் செய்யாமல் மொத்தமாகச் சொல்லிக் கொடுக்க விட்டுவிட்டால், சிலர் தேறுவர்; பலர் தவறுவர். பணமும்