பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வகுப்பறைகள் சில பள்ளிகளில் வெவ்வேறு அளவில் இருந்தன. மொத்தத்தில், பள்ளிகளுக்கென்று தனியான புறத்தோற்றம் இல்லை. புறக்கவர்ச்சியை விட்டுவிட்டு, அகநிலையைக் கவனிப்போம்.
பள்ளி வளைவிற்குள் நுழைந்ததும், லெனினும் ஸ்டாலினும் எங்களை வரவேற்றனர். பல பள்ளி களில் முதலில் தென்பட்டவை, இவ்விரு தலைவர் களின் சிலைகளே. சில முழு அளவில் இருந்தன சில மார்பளவில் இருந்தன. வளைவைத் தாண்டி கட்டடத்திற்குள் நுழைந்ததும் மீண்டும் இரு தலைவர்களையும் கண்டோம். உள்ளே படமாக எங்களை வரவேற்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரிய ருக்குத் தனி அறை ஒன்றுண்டு. ஏதோ ஒர் மூலேயில், கிடைத்த சிறு இடத்தில் பதுங்கிக் கொள்வதாகக் காணுேம் அந் நாட்டுத் தலைமை ஆசிரியர்கள். அவர்கள், இருந்து பணியாற்ற மட்டும் போதுமானதாக இல்லே அவ்வறைகள். ஒரே நேரத்தில், ஐந்து ஆறு பார்வையாக: களையும் உட்கார வைத்துக்கொண்டு பேசுவதற்கு ஏற்ற அளவில் இருந்தன அவ்வறைகள். வந்தவர்களே நிற்கவைத்துப் பேசும் பெரியவர்கள் அந் நாட்டில் இல்லை. எனவே பள்ளிக்கூடத்தின் துலேவரைப் பார்க்கப் போவோர் யாராயினும் அவர் முன் உட்கார்ந்தே பேசுவர். அதற்கு வேண்டிய நல்ல நாற்காலிகள் அங்கு இருந்தன. பள்ளிக்கூடத் திற்குச் சென்ருல், தலைவரை முதலில் பார்ப்பதே