பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


'படியுங்கள்; படியுங்கள்; மேலும் படியுங்கள்' என்று வழி காட்டினார் சோவியத் மக்களின் தனிப் பெரும் தலைவர் லெனின். படிப்பைப் பாழாக்கி விட்டு, புதுப் ப்யிருக்கு எருவாகுங்கள் என்று கூற வில்லை அவர்.

நம் தலைவர்களுக்குமட்டும் வழி காட்டத் தெரியாதா? "படிப்பு, போனுல் போகட்டும். நாங்கள் வந்தால் போதும். எங்கள் வளர்ச்சி உங்கள் மகிழ்ச்சி" என்று முழங்குகின்றனர் தமிழ்ப் பெருந்தலைவர்கள்.

'இருந்தால் மாணவனுய் இரு. இல்லையேல், அரசியல்வாதியாக இரு. ஒரே நேரத்தில் இரண்டுமாக முயன்று, இரு நிலையையும் கெடுக்காதே’ என்று இடித்துரைத்தார் நம் நாட்டின் தந்தை, ஆயிரங்காலத்துத் தலைவர், அண்ணல் காந்தியடிகளார். புதுத் தலைவர்களுக்கோ இது தெரியாது. நான் நினைவுபடுத்த முடியுமா? துணிந்து நினைவு படுத்திேைலா, இவர் யார் இதைச் சொல்ல ? சம்பளக்காரனுக்கு இந்த வம்பு எதற்கு ? என்று சிறுவர். அதையும் அலட்சியப்படுத்திவிட்டு எடுத்துக் காட்டினுலும், இப் பெருந் தலைவர்களின் போர் முழக்கத்திலே, என் குரல் யார் காதிலாவது . ஏறமா என்ற ஐயம் எழுந்தது.

பொறு மனமே! பொறு! ' இன்று கட்டுண்டோம். பொறுத்திருப்போம். காலம் மாறும்' என்று தேற்றிக்கொண்டு, பள்ளிப் பார்வையில் தொடர்ந்து ஈடுபட்டேன்.