42
தரமாகப் பெறக் கூடுதல் நேரம் வேண்டும். இப் பள்ளி உறையுள் பள்ளியாக இருப்பதால் இசைக்கும் போதிய நேரம் ஒதுக்க முடிகிறது. சரியான பயிற்சி கொடுக்க முடிகிறது. தரமான இசைவாணர்களே உருவாக்க முடிகிறது’ என்று விளக்கினர் எங்களுக்கு, ஆகவே, எதிர்கால சோவியத் கலைஞரும், இசைவல்லுனரும், நடிகரும் இரண்டெழுத்துப் பேர்வழியாக வாழ மாட்டார்கள். பொதுக் கல்வியில் சாதாரணக் குடிமகனுக்கு இளேக் காதவர்களாக இருப்பர்' என்று தெரிந்துகொண்டோம். சோவியத் மக்கள், அறிவிற்குக் கொடுக்கும் மதிப்பு என்னே !
சிறப்புக் கல்வியும் பொதுக் கல்வியும் நிறைந்த இத் திட்டம் காகிதத் திட்டமா ? மெய்யாகவே நடக்கிறதா ? இக் கேள்விகள் எங்களுக்குள் எழுந்தன. இவற்றிற்கு பதில் தேடிக்கொண்டோம். இரண்டும் மெய்யாகவே நடப்பதைக் கண்டோம். பொதுப் பாடங்களுக்கான ஏற்பாடுகளைப் பார்த்தோம். இசைப் பயிற்சிக்குத் தேவையான பல இசைக் கருவிகளைக் காட்டினர். மாணவருக்கு ஒர் ஆசிரியர் வீதம் உட்கார்ந்து கற்றுக் கொடுப்பதைக் கண்டோம். எனவே, இப்பள்ளிக்கு பல ஆசிரியர்களோ ? என்று கேட்டு வைத்தோம்.
'நூற்று ஐம்பது மாணவ மாணவிகள் படிக்கும் இப்பள்ளிக்கு அறுபத்து நான்கு ஆசிரியர்கள். இவர்களில் பலர் இசை ஆசிரியர்கள். ஆசிரியர்கள் போக, நாற்பத்து இரண்டு அலுவலர்கள் இருக்கின்றனர்’ என்று பெருமைப்பட்டார் பள்ளித் தலைவர்.