பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

"இப் பள்ளியில் இருப்பவர்களில் எத்தனைபேர் டாஸ்கண்ட் நகரத்தினர் ?"
"ஒரு சிலரே இந்நகரத்தினர். பெரும்பாலோர் வெவ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கியெடுக்கப் பட்டவர்கள். இசையிலே தனித்திறமையுடைய சிறுவர் சிறுமிகளைப் பல பக்கங்களிலிருந்தும் தேர்ந்து எடுக்கிருேம். அப்படித் தேர்ந்தெடுப்பதற்காக, எங்கள் ஆசிரியர்கள் உஸ்பெக் குடியரசின் மூலை முடுக்குகளுக்கெல்ல்ாம் செல்கிருர்கள். குழந்களின் குரல், இசைப்பற்று, திறமை ஆகியவற்றைச் சோதித்துப் பொறுக்கி அனுப்பிவைக்கின்றனர். ஏழு வயது முதல் இங்குச் சேர்ந்து படிக்கலாம்' என்று விவரித்தார் பள்ளித் தலைவர்.
'சின்னஞ்சிறு வயதில் இப் பள்ளிக்குத் தேர்ந்து எடுக்கிறர்கள். இரண்டொரு ஆண்டு இருந்து படித்தபின், இசைப் பயிற்சியில் வெற்றி பெற மாட்டார்கள் என்று தோன்றினுல் என்ன செய் வார்கள்?"
இசைக் கல்வியில் வளராவிட்டால், சாதாரணப் பள்ளிக்கு மாற்றிவிடுவோம். இப் பள்ளியிலும், மற்றப் பொதுக் கல்விப் பாட திட்டத்தைப் பின்பற்றுவதால், அப்படிப்பட்ட மாற்றத்தால், மாணவர்களுக்கு எவ்விதத் துன்பமோ இடையூவராது' என்றார்கள்.

பல வகுப்புகளையும் இசைப் பயிற்சியையும் காட்டுவதோடு நிற்கவில்லை பள்ளித் தலைவர். எங்களை வரவேற்க கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பள்ளிக்கூட இசையரங்கத்தில்