பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நன்றி கூறிவிட்டு நடந்தோம். பூங்காவின் எழிலையும் ஏரியின் நிலையையும் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
ஒய்வு பெற்ற பொறியர் ஒருவர் இதை மேற் பார்வையிடுகிறார். பள்ளிக்கூட மாணவ மாணவிகளில், இரயில்வேயில் வேலைக்குப் போக நினைப்பவர்கள், இங்குவந்து நேரடிப் பயிற்சி பெறுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை, மூன்று மணி நேரம் பயிற்சி பெறுகிறர்கள். இரயில்வேயில் செய்ய வேண்டிய பல வேலைகளையும் மாணாவர்களாக இருக்கும்போதே கற்றுக்கொள்கிறார்கள்.
டாஸ்கண்ட் சிறுவர் இரயில்வேயின் தலைமை நிர்வாகி, பொறியர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற ஓர் அம்மையார். எங்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவரும் ஒரு பெண். உஸ்பெக் குடியரசின் தலைவர் ஓர் ஆணல்லர், பெண். அவர் பெயர் நஸ்ரத்டிநோவாயட்கர் அம்மையார். அமைச்சர்களிலே இருவர் பெண்மணிகள். உஸ்பெக் குடியரசின் பொதுவுடைமைக் கட்சியின் செயலர் ஒரு பெண். அவர் பெயர் என்ன? ரஹீம் பாபாயவா ஜோயா அம்மையார் என்பதாகும். பல துறைகளிலும் பெண்கள் தாராளமாகப் பங்குகொள்கிறார்கள். உரிய பங்கு பெறுகிறார்கள். உஸ்பெக் பெண்கள் பன்னெடுங்காலமாகப் பாராளும் பெண்மணிகளாக இல்லை. முன்பெல்லாம் 'அலங்காரப் பொம்மைகள்'. படுதாவால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொம்மைகளாய் விட்டுப் பொறுப்போடு அடங்கிக் கிடந்தார்களாம். அப்படிப்பட்ட பழைய