பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வாழ்வதிலே விருப்பு ஏற்பட்டுவிட்டால் அதற்கு வேண்டிய அத்தனையையும் தேடிக் கொள்ள முடியும். உடனே இல்லாவிட்டாலும் காலத்தில் அடையலாம்' என்று பேசிக்கொண்டே அடுத்த இடத்திற்குச் சென்றோம். காரிலேயே சுற்றிவந்தோம் அப்பரந்த குன்றை.
'இக்குன்றிற்குப் பெயர் லெனின் குன்று. இதன் மேல் மாஸ்கோ பல்கலைக்கழகம்' கட்டப்பட்டுள்ளது என்று விவரித்தார். 'இதுவா முப்பத்திரண்டு மாடிக் கட்டடம்' என்று கேட்டோம்.'ஆம் பரந்த இக்கட்டடத்தின் ஒரு பகுதி 32 மாடி கொண்டது. எங்கள் நாட்டின் உயர்ந்த கட்டடம் இதுவே. இருபக்கங்களிலும் இணைத்திருக்கும் பகுதிகள் ஒவ்வொன்றும் 18 மாடிகள் கொண்டவை' என்பது பதில்.'பரப்பளவு எவ்வளவோ?' என்பது எங்கள் ஐயம். இக்கட்டடத்தின் பரப்பு 3-84 சதுர கி.மீ. ஒவ்வொரு மாடியாகச் சுற்றிப் பார்க்க எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா ? நூற்று நாற்பத்தின்னாகு கி.மீ. தூரம் நடந்தால்தான் எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கலாம்.'அடேயப்பா, எவ்வளவு பரப்பு! எவ்வளவு உயரம்! அப்படியானால் எண்ணற்ற அறைகள் இருக்குமே!’ என்றோம்.