பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. பாட்டிகள் படிப்பு



1961ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள், நான் 'டாஸ்கண்ட்' என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்நகரம் எங்கேயுள்ளது? சோவியத் ஒன்றியத்திலுள்ளது. சோவியத் ஒன்றியம், பதினைந்து குடியரசுகள் இணைந்த ஓர் ஆட்சி. அக்குடியரசுகளுள் ஒன்று உஸ்பெகிஸ்தான் என்பது. அதன் தலைநகரமே 'டாஸ்கண்ட்’.

பள்ளியிலோ கல்லூரியிலோ நான் தெரிந்து கொள்ளாத அந்நகரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? புது தில்லியிலிருந்து கிட்டத்தட்ட 2,160 கி.மீ. தொலைவிலுள்ளது. எத்துணை நெடுந்தூரம்! அத்துணை தூரம் செல்ல எத்தனே நாளா யிற்று!' என்று வியக்காதீர்கள். நாள் கணக்கும் மாதக் கணக்கும் அந்தக் காலம். இந்தக் காலத்தில் எவ்வளவு நேரம் வேண்டும்? புது தில்லியிலிருந்து அந் நகரத்திற்குச் செல்ல ஐந்து மணி நேரம் பிடித்தது. எண்பது கி.மீ. தூரத்தில் உள்ள எங்கள் ஊருக்குப் போகும் நேரத்தில் தில்லியிலிருந்து டாஸ்கண்ட் சென்றடைந்தேன். வெகு விரைவாகப் பயணம் செய்யும் காலம் இது.

'டாஸ்கண்டில்' அதே பெயருடைய ஒட்டலில் தங்கியிருந்தேன்; இல்லை தங்கிருந்தோம் . என்னுடன் வேறு இரு இந்தியக் கல்வியாளர் வந்திருந்தனர். ஒருவர் பெயர் திரு. இராசாராய் சிங். இவர்