பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

துணிந்து ஏறினேன். எல்லோருமாகச் சில வினாடிகளில் பாதாள பிளாட்பாரத்தில் இருந்தோம்.
மெட்ரோ நிலையம் சோபிதமாயிருந்தது. மேலே, கண்ணாடிக் கூண்டு விளக்குகள் தொங்கின. சுவர் களெல்லாம் பளபளவென்று மின்னின. ஒவியங்கள் பல கவனத்தைக் கவர்ந்தன. தரையோ மழமழ் வென்று இருந்தது. எங்கும் துாசி இல்லை.இவற்றைக் கண்டு வியந்துகொண்டிருக்கையில், விரைந்தோடி வந்து நின்றது மின்சார இரயில் , எங்களையெல்லாம் இழுத்துக்கொண்டு உள்ளே ஏறினார் மொழிபெயர்ப்பாளர் , அது இரண்டொரு வினாடிகளில் புறப்பட்டு விட்டது. உள்ளே ஒரே நெருக்கம். அடுத்த நிலையம் வரை நின்றுகொண்டே போனோம். அங்குச் சிலர் இறங்கியதால், எங்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. அதற்கடுத்த நிலையத்தில் இறங்கினோம். அந்நிலையத்தின் அழகைக் காட்டினார் மாஸ்கோ வாசி.
இந் நிலையம் வேறு மாதிரி இருக்கிறதே என்று பாராட்டினோம்.
ஆம். மெட்ரோ நிலையம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் அமைந்திருக்கும். ஒன்றின் பிரதியாக மற்றோன்று இராது. ஆனால் எல்லாம் பார்க்கத் தகுந்தவை. நேரமிருந்தால் ஒவ்வொரு நிலையமாக இறங்கிப் பார்த்துவிட்டு அடுத்து ஏறிச் செல்லலாம்: என்றார் உடன் வந்தவர்.
'அவ்வளவுக்கும் ஒரே கட்டணமா?'