பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

நல்ல சத்துள்ள உணவுங்கூட. நீங்கள் சாப்பிடுகிறார்களா?' என்று கேட்டார், எங்கள் வழிகாட்டி. தெருவில் நின்று ஐஸ்கிரீம் உண்ண வெட்கம். ஆகவே வேண்டாமென்று கூறிவிட்டு நடந்தோம். இரவு சாப்பாட்டின்போது இதை விட்டுவைக்கவில்லை நாங்கள் யாரும். கொஞ்ச தூரம் நடந்தோம். ஒரு வாலிபர் முன்னே வந்து நின்றர். நீங்கள் இந்தியாவில் இருந்தா வருகிறீர்கள்?’ என்று சரியான உச்சரிப்பபோடு ஆங்கிலத்தில் வினவினர்.
'ஆம்' என்ற பதில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அப்படியானால் நீங்கள் இருக்கும். இடத்திற்கு நான் வரலாமா? எப்போது வரலாம்? யோகாசனத்தைப் பற்றி உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார்.
"எங்களில் யாருக்கும் யோகாசனத்தின் அரிச்சுவடிகூடத் தெரியாது. அதைச் சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி கேட்பதற்கு முன் நழுவிவிட்டோம்."
இரவு ஒரு மணிவரை நடமாட்டம் உண்டு மாஸ்கோவில். அதற்கப்புறமே ஊரடங்கும். மீண்டும் நான்கு மணிக்கெல்லாம் நடமாட்டம் தொடங்கிவிடும். இந்நகரத்தோடு போட்டி போடாதீர்கள் நீங்கள். காலா காலத்தில் உண்டு உறங்குங்கள்’ என்று கூறிக்கொண்டே ஓட்டல் வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினர், திறமைமிக்க வழி காட்டியும் மொழி பெயர்ப்பாளருமான அந்த அம்மையார்.