பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



இந்திய அரசிற்கு இணைக் கல்வி ஆலோசகர். மற்றெருவர், குமாரி சரளா கண்ணா. இவர் பஞ்சாப் மாநிலத்தின் கல்வி இயக்குநர், நாங்கள் மூவரும் அவ்வோட்டலில் தனித்தனியே தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல் நாள் மாலை அங்குப் போய்ச் சேர்ந்தோம். மாலையில் வெளியே செல்ல நேரம் இல்லை. ஆகவே இரவு உணவருந்திய பின், சற்று உலவச் சென்றோம். மணி ஒன்பதற்குமேல் இருக்கும். காற்று இனிமையாக வீசிக்கொண்டிருந்தது. சிறிது குளிரும் இருந்தது. வரவேற்கத்தக்க அளவே இருந்தது. தெருக்களெல்லாம் மின்சார வெளிச்சம். கடைகளெல்லாம் முடிக்கிடந்தன. ஆனால், உலவுவோர் பலர்.
ஒட்டலுக்கு அடுத்துள்ள, பெரிய தெரு ஒன்றில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தோம். பெரும்பாலும் எல்லாக் கட்டடங்களும் மூடிக் கிடந்தன. 400, 500 கி.மீ. சென்றபின் ஒரு மாடிக் கட்டடத்தின் கீழ்ப்புறச் சாளரங்களெல்லாம் திறந்திருப் பதைக் கண்டோம். அவை ஏறத்தாழ நான்கடி உயரத்தில் இருந்தன. நடந்தபடியே, உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தோம். மக்கள் இருக்கக் கண்டோம். கிட்டத்தட்ட முப்பது பாட்டிகளைக் கண்டோம். நாற்பது ஐம்பது வயதினர் என்பதை அவர்கள் தோற்றம் காட்டிற்று. அப்பெண்மணிகள் எல்லோரும் ஐந்தாறு வரிசை களில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னுல் ஒரு பெண்மணி தனியாக உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னல் ஒரு கரும்பலகை. அதில் ஏதோ