பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

87

அப்படியானுல், ஆசிரியர் மறுபயிற்சிக் கூடமா இது?’ என்று கேட்டோம்.

ஆம்’ என்பது பதில்.

அவர்களுக்கு, முதல் பயிற்சி கொடுக்கும் வகுப்பு இங்கு உண்டா ?' என்பது அடுத்த கேள்வி.

இங்குக் கிடையாது. ஆசிரியருக்கு முதற் பயிற்சிக்கூடங்கள் வேறு. மறுபயிற்சிக் கூடங்கள் வேறு. ஒரு வேலையை இன்னொரு பள்ளியின்மேல் சுமத்தினால் இரண்டும் கெட்டுவிடும். ஆகவே இரு வேலைகளுக்கும் தனித் தனியாகப் பள்ளிகள் உள்ளன' என்று கூறினார்.

ஒகோ! மறுபயிற்சிக் கூடங்கள் ஏராளமோ ! என்ற ஐயத்தைக் கிளப்பினோம்.

ஆம். அத்தகைய பள்ளிகளே பலப்பல. ஒவ்வொரு குடியரசும் பல பிராந்தியங்களாக, மாவட்டங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிராந்தியத்தின் தலைநகரிலும் ஓர் ஆசிரியர் மறுபயிற்சிப் பள்ளியாவது இருக்கும்’ என்று பதில் உரைத்தார்.

இத்தனை மறுபயிற்சிப் பள்ளிகளுக்கும் வேலை உண்டா ? போதிய ஆசிரியர்கள் மறுபயிற்சிக்கு வருகிறார்களா?' என்று வினவினோம்.

எல்லா மறுபயிற்சிப் பள்ளிகளுக்கும் போதிய வேலை உண்டு. மறுபயிற்சி பெறுவது ஆசிரியருடைய விருப்பத்தைப் பொறுத்ததன்று. ஐந்தாண்டிற்கு ஒரு முறை, ஒவ்வோர் ஆசிரியரும் மறுபயிற்சி