பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கொடுத்த நாச்சியாருக்குப் பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஒரு பொன் குடத்தை தானமாகக் கொடுத்தார்.

இவர் மனம் போல் மாங்கல்யம் என்னும் தூய்மையான மனதுடையவர். இதற்கு ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். ஒரு முறை யார் நாடகமாடுவது ஒரு கொட்டகையில் என்று இவரது கம்பெனிக்கும் ஆரிய கான சபா என்னும் மற்றொரு நாடக கம்பெனிக்கும் ஒரு வியாஜ்யம் சென்னை ஸிடி ஸிவில் கோர்ட்டில் நடத்தப்பட்டது. அதன் ஜட்ஜாயிருந்தவர் இதை நான் தீர்மானிப்பதைவிட நாடகங்களில் ஈடுபட்டிருக்கும் சம்பந்த முதலியாரை மத்யஸ்தராய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருதரத்தாரையும் அதற்கிணங்கும்படி செய்து இந்த வியாஜ்யத்தை என்னிடம் அனுப்பினார். இருதரத்தாரும் ஒப்புக் கொண்டார்கள். நான் இரு தரத்தாரையும் நன்றாய் விசாரித்து கன்னையா அவர்களுக்கு விரோதமாக ஆரிய கான சபையார் பட்சம் தீர்மானம் செய்தேன். அப்படியே டிக்ரியும் ஆய்விட்டது. இப்படியிருந்தும் சில மாதங்களுக்குப் பின்பு தான் கொடையாளி கர்ணன் என்னும் நாடகத்திற்கு ஒத்திகை செய்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, தான் நேரில் வந்து பார்த்து எனக்காக வென்று பொன் முலாம் பூசிய கவசகுண்டலங்கள் முதலிய ஆபரணங்களை செய்து கொடுத்ததுமன்றி அந் நாடகத்திற்கு வேண்டிய இரண்டு மூன்று குதிரைகள் பூட்டிய ரதங்களை தன் செல்வில் செய்து நன்கொடையாக சுகுண விலாச சபைக்கு கொடுத்தார். கடைசி ஒத்திகையில் தான் அருகிலிருந்து ரதங்களை நடத்தும் விஷயங்களை எங்களுக்குக் கற்பித்தார். திருவள்ளுவர் வாக்கின்படி இவர் செய்யாமற் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும். இப்போது எழுதுகிறேனே அதுதான் நான் செய்யக் கூடிய கைம்மாறு ஆகும். இவரது ஆன்மா ஆண்டாளின் திருவடியின் கீழ் என்றும் நிலைத்திருக்குமாக.

திரு. கிட்டப்பா அவர்கள்

இவரது பெயர் கிருஷ்ணசாமி என்றிருந்தும் எல்லோரும் இவரை கிட்டப்பா என்றே அழைப்பார்கள். மேற்சொன்ன கன்னையா கம்பெனியில் இவர் சிறு வயதிலேயே சேர்ந்து நடித்து வந்தார். கன்னையா அவர்களால் இவர் நடிப்புக் கலையைக் கற்றார். பிறகு பெரியவனான பிறகு இவரே