பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகத்தில் மகேந்திர பல்லவனாகத் தோன்றியது இவருக்குப் பன்மடங்கு சிறப்பைத் தேடித்தந்தது.

திரு. பகவதி நடிப்புத் துறையில் மட்டுமல்ல, நிர்வாகத் துறையிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். 1950 முதல் டி. கே. எஸ். நாடக சபையின் நிர்வாக பொறுப்பு முழுவதும் இவரே ஏற்று நடத்தி வருகிறார். புது தில்லியில் பாரத அரசாங்கத்தாரால் அமைக்கப் பெறும் நேஷனல் தியேட்டர் அமைப்பு ஆலோசனை குழுவில் பகவதி ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் நாடு சங்கீத நாடக சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் முதலிய அமைப்புகளில் இவர் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழ் நாடு அரசாங்க நாடக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் உறுப்பினராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். 1950 முதல் டி. கே, எஸ், நாடக சபை தயாரித்த 'இன்ஸ்பெக்டர், கள்வனின் காதலி, ரத்தபாசம், தமிழ் செல்வம், வாழ்வில் இன்பம், தேச பக்தர் சிதம்பரனார், சித்தர் மகள், இராஜ ராஜ சோழன், சிவகாமியின் சபதம், உயிர்ப்பலி, பாசத்தின் பரிசு முதலிய பல்வேறு நாடகங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்து உதவி யிருக்கிறார். தேசீய பெருமை வாய்ந்த நாடகங்களான 'முதல் முழக்கம்', 'தேச பக்தர் சிதம்பரனார்' ஆகிய நாடகங்களில் பகவதி கட்ட பொம்மனாகவும், சிதம்பரனாராகவும் திறம் பெற நடித்து நாடக ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

டி. கே. பகவதி நாடக உலகில் சிறந்த இடம் பெற்றிருப்பதோடு திரைப்படத் துறையிலும், பல படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார். 1935-இல் சிறந்த படமென்று பொது மக்களால் பாராட்டப் பெற்ற 'மேனகாவில்' பகவதி கதா நாயகன் வராகசாமியாக நடித்தார். தொடர்ந்து பாலாமணி, குமாஸ்தாவின் பெண், பில்ஹணன், மனிதன், இன்ஸ்பெக்டர், ரத்தபாசம், சம்பூர்ண இராமாயணம், மகா வீர பீமன், குலமகள் ராதை முதலிய திரைப்படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார்.

திரு. சகஸ்ரநாமம் அவர்கள்

இவர் பிறந்தது 1913-ஆம் வருடம், இவர் சிறு வயதில் சில நாடகக் கம்பெனிகளின் நாடகங்களைப் பார்த்து தானும்