பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

யாம்.அக்காலத்தை சடையின் பொற்காலம் எனக்கூறி இவர் விர்த்தாந்தத்தை முடிக்கிறேன்.

ஸ்ரீ S. சத்தியமூர்த்தி

இவரை அறியாத அரசியல் கட்சிக்காரர்கள் இந்தியாவிலேயே இல்லை எனச் சொல்லலாம். ஆயினும் இவர் நடிப்புக் கலையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே இவரைப்பற்றி நான் இங்கு சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர் காலேஜ் படித்தவுடன் எங்கள் சுகுணவிலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்தார். அவரே எனக்கு பன் முறை கூறியபடி நான் தான் அவருக்கு முதல் சிநேகிதனாயிருந்தேன். புதிய மெம்பர்கள் யாராவது சேர்ந்தால் உங்களுக்கு நாடகமாடுவதில் விருப்பமிருக்கிறதா? என்று கேட்பது என் வழக்கம். அதன்படியே இவரை நான் கேட்டபோது 'ஆம்' என ஒப்புக் கொண்டார். அதன் பிறகு முதலில் தமிழில் சிறு பாத்திரங்களை கொடுத்துப் பழக்கி வந்தேன். முதலில் மிகவும் கூச்சமுள்ளவராயிருந்தபோதிலும் சீக்கிரம் அக்கூச்சம்போய் உற்சாகத்துடன் கற்றுவந்தார். பிறகு வரவர பெரிய பாத்திரங்களை கொடுக்கலானேன். இவரை ஒரு தைர்யமுள்ள நடிகர் என்றே கூறவேண்டும். இவர் சேர்ந்த சமயம் சம்ஸ்கிருத பிரிவு ஒன்று எங்கள் சபையில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் சம்ஸ்கிருத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். எங்கள் சபை போட்ட ஒவ்வொரு சம்ஸ்கிருத நாடகத்திலும் பாகம் எடுத்துக்கொண்டு வந்தார். இவர் முக்கியமாக நடித்த சம்ஸ்கிருத பாத்திரங்கள் மிருச்சகடி என்னும் நாடகத்தில் கதா நாயகனுடைய நண்பனாகிய வேடம் ஒன்று. இரண்டாவதாக வேணி சம்ஹாரத்தில் அஸ்வத்தாமனாக நடித்ததாகும். இவர் இரண்டொரு வருஷம் சம்ஸ்கிருத கண்டக்டராக இருந்தார். நான் சுமார் 25 வருஷம் தமிழ் கண்டக்டராக உழைத்த பிறகு அதனின்றும் விலகியபோது எனக்குப் பிறகு தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்ட பலருள் இவரும் ஒருவர். அச்சமயம் ஒரு முறை என்னிடம் வந்து "நான் மனோகரனாக நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூற, "அப்படியே செய்யுங்கள் அதற்கென்ன தடை" என்று சொன்னேன். இதைப்பற்றி கொஞ்சம் விவரிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அக்காலத்தில் நான் முக்கியமாய் நடித்த கதா நாயகர்களின் பாகத்தை மற்றவர்கள் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லையென்று பலர் எண்ணியது எனக்குத் தெரியும், அந்த எண்ணப்படியே இவரும் மனோகரன்