பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

போவதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது எப்படி யிருக்கிறது என்று நான் பார்க்கப் போயிருந்தேன். 9 மணிக்கு நாடகம் ஆரம்பமானபோது நான் உட்பட ஹாலில் முழுவதிலும் ஏழு பெயர்கள் தான் உட்கார்ந்திருந்தோம்! இருந்தும் சபையோர் நாடகத்தை சரியாகவே ஆதியோடந்தமாய் நடத்தினர். அதில் கதா நாயகன் வேடம்பூண்டார் ஸ்ரீராகவாச்சார்லு, இது என்ன இது தெலுங்கு நாடகத்திற்கு சாதாரணமாக ஜனங்கள் அதிகமாய் வருவார்களே என்று நான் விஜாரித்த போது உண்மை வெளியாகியது. இதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு அவர்களின் சரச வினோதனி சபா நாடகங்கள் நடத்தியபோது திரளான ஜனங்கள் வந்திருந்தார்களே, இதற்கு மாத்திரம் ஏன் வர வில்லை என்று வினவியபோது இந்த சுமனோகர சபையோருக்கும் கிருஷ்ணமாச்சார்லு சபையோருக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்ததாம். அதன் பேரில் சென்னையில் உள்ள தெலுங்கர்கள் அநேகர், முக்கியமாக கோமுட்டிகள் இந்த சபை நாடகத்தை பார்க்கக் கூடாது இதை பாய்காட் (BoyCott) செய்ய வேண்டுமென்று தீர்மானித்து எல்லோரும் கட்டுப்பாடாய் நின்று விட்டார்களாம். இந்த உண்மையை அறிந்தபின் சுமனோகர சபா நடிகர்களிடம் போய் நீங்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை, நாடகம் நன்றாயிருந்தது. முக்கியமாக ராகவாச்சார்லு நடித்தது மிகவும் நன்றாயிருந்தது. ஆகவே உங்கள் தைர்யத்தை கைவிடாதீர்கள்.. உங்கள் நாடக சபையின் ஏற்பாட்டின்படி நாடகங்களை நடத்துங்கள் என்று சொல்லி முக்கியமாக ராகவாச்சார்லுவை உற்சாகப்படுத்தினேன். நான் சொன்ன ஜோஸ்யத்தின்படி அதே விக்டோரியா பப்ளிக் ஹாலில் அதே நாடகத்தில் ராகவாச்சார்லு நடித்தபோது பெரும் திரளான ஜனங்கள் வந்து குவிந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

ராகவாச்சார்லு அவர்கள் மிகச் சிறந்த நடிகர், நடிப்புக் கலையில் மிகவும் தேர்ந்தவர். ஆனால் சங்கீதத்தில் என்னை போலத்தான். தெலுங்கில் பத்யங்கள் மாத்திரம் நன்றாய் பாடுவார். வேறொன்றும் பாட மாட்டார். கீதங்கள் பாடி நான் கேட்டதில்லை. பிறகு பன்முறை ராகவாச்சார்லு சென்னையில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முக்கிய பாத்திரங்கள் பாதுகா பட்டாபிஷேகத்தில் தசரதன், விஜய நகர வீழ்ச்சியில் ருஷ்டம், ஹிரண்யகசிபு, கடோத்கஜன் முதலியவைகளாம், அவர் பலவிதமான வேடங்களை பூண்டிருக் கின்றனர். எந்த வேஷத்தை கொடுத்தாலும் ஏற்றுக்