பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

கொண்டு நன்றாய் நடிப்பார். இது ராஜபார்ட் இது சேவகன் பார்ட் என்கிற வித்தியாசம் இவருக்குக் கிடையாது. எந்த வேடம் பூண்டாலும் அந்த நாடகக் கதையை நன்றாய் படித்து எவ்வாறு நடித்தால் சபையின் மனதைக் கவர முடியும் என்று யோசித்து அதற்குத் தக்கவாறு கஷ்டமெடுத்துக் கொண்டு நடிப்பார். இவர் எங்கள் சுகுண விலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்து ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். எங்கள் சபை பட்டணத்தை விட்டு வெளியில் போய் வேறு ஊர்களில் தெலுங்கு நாடகங்கள் நடத்தியபோதெல்லாம் இவரை அழைத்துக் கொண்டு போவோம். எங்கள் சபையின் தெலுங்கு பிரிவை முன்னுக்குக் கொண்டு வந்தவர்களுள் இவர் முக்கியமானவர் இவர் தமிழ் நாடகங்களிலும் இரண்டொரு முறை நடித்துள்ளார். அதில் ஒன்றைபற்றிய விசேஷ சம்பவத்தை நான் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு வருடம் 'ரஜபுத்ர வீரன்' என்னும் எனது தமிழ் நாடகத்தை நடத்தினோம், அதற்காக எங்கள் சபை தலைவராயிருந்த T. V. சேஷகிரி ஐயர் அவர்கள் தனது சகாக்களாகிய சில ஹைகோர்ட் ஆங்கில ஜட்ஜுகளையும் வரும்படி கேட்டிருந்தது எனக்குத் தெரியும். ஆகவே அந் நாடகம் மிகவும் நன்றாய் இருக்க வேண்டுமென்று கஷ்டப்பட்டு ஒத்திகை முதலானவைகளை செய்து வைத்தேன், நாடக தினம் வந்தது. அத்தினம் 6 மணிக்கு நாடக ஆரம்பம். 3 மணிக்கு ரஜபுத்ர வீரனுக்கு எதிரியாயிருந்த ஒரு மகம்மதிய அரசன் பாத்திரத்தை எடுத்துக் கொண்டவர் தனக்கு மிகவும் காயலாயிருக்கிற தென்றும் சாயங்காலம் நடிக்க முடியாதென்றும் சொல்லியனுப்பினார்! அதைக் கேட்டு நான் பிரமித்து திகைத்துக் கொண்டிருக்கையில், தெய்வாதீனத்தால் ஏதோ வேலையாக அத்தினம் பட்டணத்திற்கு வந்திருந்த எனது நண்பர் ராகவாச்சார்லு என்னை பார்க்க விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வந்தார். சுருக்கி சொல்லுமிடத்து எனக்கு நேரிட்ட கஷ்டத்தை அவரிடம் தெரிவித்த போது உடனே "சம்பந்தம் ஒன்றும் பயப்பட வேண்டாம். அந்த நவாப்பின் பாத்திரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி அப் பாத்திரத்தின் வசனங்களை நான் தமிழில் சொல்ல அவர் தெலுங்கில் எழுதிக்கொண்டு, ஒரு அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு 4 மணிக்கு என்னிடம் வந்து என் பாகத்தை ஒப்புவிக்கிறேன், சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று குருட்டு பாடமாக என் எதிரில் நடித்துக்காட்டினார் என் உள்ளம் பூரித்தது. நாடகத்தில் அவர் நன்றாய் நடித்ததுமன்றி தானாக ஒரு முக்கிய