பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

மீது கொண்ட பிரியத்தை மற்றவர்கள் அறியும் பொருட்டேயாம். இக்கூற்று அவர் என் அருகிலிருந்த ஆந்திர தேசத்தவர்க்கு சொல்லியதாகும். "நீங்கள் நாடகத்துறையில் மிகவும் அருமையானதை கேட்க வேண்டுமென்றிருந்தால் மிஸ்டர் சம்பந்தம் நடிப்பதை கேளுங்கள். அவர் கிழக்கிலும் மேற்கிலும் நடிக்கும் சிறந்த நடிகர்களுடைய நடிப்புத் திறமையெல்லாம் நன்றாய் உருவாக்கி உங்களை கேட்கச் செய்வார்" என்பதாம்.

நடிகர்களுள் ஒருவருக்கொருவர் மிகவும் பொறாமை கொண்டவர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு சாதாரண பேச்சாகும். இருந்தும் பொறாமை என்பது சிறிதும் இல்லாது என்னைப் பற்றி எனது காலஞ் சென்ற நண்பர் புகழ்ந்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன், எனது கண்களில் நீர் ததும்ப இதை இப்போது எழுதுகிறேனே இது தான்!

திரு. குப்பி வீரண்ணா

இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவர் அங்கு பல வருடங்களுக்கு முன் குப்பி நாடகக் கம்பெனி என்று ஒன்றை ஏற்படுத்தி பல வருடங்கள் நன்றாய் நடித்து தியாதி பெற்றிருக்கிறார். இன்னும் இந்நாடகக் கம்பெனி ஆடிவருவதாக கேள்விப்படுகிறேன்.

வீரண்ணா அவர்கள் ஹாஸ்ய பாகங்கள் நடிப்பதில் மிகவும் கெட்டிக்காரர். இவரது சதாரம் நாடகத்தில் திருடன் வேடம் எப்போதும் ஹால் முழுவதும் ஜனங்கள் நிறையச் செய்யும். இவர் நடிப்புத் திறனுக்காக சங்கீத நாடக சபையார் பொற்பதக்கம் அளிக்கப் பெற்றவர்.

இவரது நாடக சபையில் முக்கியமாக நான் குறிக்க வேண்டிய விசேஷம் ஒன்று உளது. அதாவது ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் முக்கியமான ஆண்வேடமும் ஸ்திரீ வேடமும் தம்பதிகள் இருவர் எடுத்துக்கொண்டு நடிப்பதேயாம். இந்த வழக்கம் தற்காலத்திய நாடக சபைகளில் பெருகி வந்தால் அச்சபைகளைப் பற்றிய சிலர் கூறும்படியான தூஷணத்திற்கு இடமிராது. இவர்கள் இருவரும் நல்ல நடிகர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பாக அயன்ராஜபார்ட் நாயுடு அவர்கள் ஏதோ வியாதியால் பீடிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்