பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏ.என்.சிவராமன் ♦ 89


செய்துவிடுவான். எனவே, அவனைத் திருப்திப்படுத்தும் முறையில் இந்தக் கருடப் பறவையில் இடது இறக்கைக்கு வெளியே அவனுக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் பயன்படுத்தக்கூடாத பொருள்களைக் கொண்டே அந்த ஹோமத்தைச் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம். மண் சட்டியைத் தொடவே கூடாது இந்த யாகத்தில் காராம்பசுவின் பாலைப் பயன்படுத்துகிறோம். ஆட்டுப்பால் பக்கத்தில்கூட வரக்கூடாது. இந்த யாகத்தில் பாலை நெருப்பில் எடுத்துச் சொரியும் ‘சுரு’ என்ற கரண்டிபோல மாவிலையைப் பயன்படுத்துகிறோம். எருக்கலையைத் தொடவே கூடாது. இப்பொழுது இடப்புற இறக்கைக்கு வெளியே அமர்ந்து கொண்டு, ருத்திரனுக்கு ஒரு ஹோமம் செய்யப் போகிறேன். மண்சட்டியில் ஆட்டுப்பாலை நிரப்பிக் கொண்டு, மாவிலைக்குப் பதிலாக எருக்கிலையைப் பயன்படுத்தி, ஸ்ரீருத்திர மந்திரங்களைச் சொல்லி உருத்திரனுக்கு இதைச் செய்துவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான் ஆசசாரியன்- என்ற பகுதி ஸ்ரீருத்திரத்தின் அதுவாகமாக உள்ளது என்பதை அன்று எனக்குத் தெளிவுபடுத்தியவர் ஏ.என்.சிவராமன் அவர்களேயாவார். அவர் தந்த விளக்கத்தைச் சற்று விரிவாக எழுதிப் பெரிய புராணம் ஓர் ஆய்வு என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் பிற்சேர்க்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இந்தப் பேருபகாரத்தைச் செய்தவர் ஏ.என்.சிவராமன் என்ற மாமனிதரே யாவார்.