பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அதை உடைக்கவேண்டு மென்றுதான் உத்தரவு இட்டிருக்கிறேன். மருந்து சார்த்தி பூசனை பண்ணப்படும் பிள்ளையாரைத் தொட்டால் கையை முறித்துவிடுவேன் என்பது என் கடுமையான உத்தரவு. அவனவன் பண்ணிக் கொண்டு வந்து உடைக்கட்டுமே? இதைப் பண்ணித் தருகிறவனுக்குக் கொஞ்சம் காசு சேருமல்லவா?’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். பெரியார் என்ற மாமனிதரின் ஒரு பக்கம் இது.

திரு.வி.க. அவர்கள் பெரம்பூர் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், இயக்குநராகவும் கடமை யாற்றியவர். 1943 என்று நினைக்கிறேன். தொழிற்சங்கத்தில் ஏதோ சில பதவிகளுக்காகத் தேர்தல் நடைபெறவேண்டிய நாள். இரண்டு கட்சியினராகப் பிரிந்து தேர்தல் நடைபெறுவதற்குப் பதிலாக-சொற்போரில் தொடங்கி மற்போர்வரை சென்று விட்டது. அவசரமாகப் புறப்பட்டு வரும்படி திரு.வி.க.விற்கு வேண்டுகோள். அப்பொழுது அங்கிருந்த என்னைப் பார்த்த சின்னையா “சம்பந்தா! எஸ்.சீனிவாசஐயங்கார் வீடு தெரியுமா?’ என்றார். நன்றாகத் தெரியும் என்றேன். “வேகமாக அவர் வீட்டுக்குச் சென்று, அவருடைய காரை நான் கேட்பதாகச் சொல்லி, இரவல் வாங்கிவா” என்று பணித்தார். புறப்படத் தயாரான என்னை “சம்பந்தா! மிகப் பெரிய மனிதர் அவர், எங்கேயாவது புறப்பட்டுக் கொண்டிருந்தால் பேசாமல் திரும்பி வந்துவிடு” என்று சொல்லி அனுப்பினார்.

மிகக் கடுமையான பெட்ரோல் பஞ்சக் காலம் அது. எவ்வளவு பெரிய மனிதருக்கும் மாதத்தில் 100 காலன் பெட்ரோலுக்குரிய கூப்பன்தான் தருவார்கள். எனவே, கார் கொடுக்கக்கூடியவர்கள் கூடக் கூப்பன் தர மாட்டார்கள். அதனால்தான் எஸ். சீனிவாச ஐயங்காரிடம் சின்னையா என்னை அனுப்பினார். லஸ் சர்ச் ரோட்டில் இருந்த