பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கேட்டானா? எங்கெங்கையோ கடன் வாங்கி ஒரு சின்ன அச்சாபீஸ் வைத்திருக்கிறான். அதையாவது கொடுக்கிறேன் என்றால், அதையும் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறான். இப்படி ஒருத்தன் இந்தக் காலத்தில் இருக்கிறான்.யாரும் ஒன்றும் பண்ண முடியாது. சரி போய் வா” என்று வழியனுப்பி வைத்தார். சின்னையாவிடம் வந்து நடந்தவற்றையெல்லாம் சொல்லி, கடைசியில் பேசியதன் விளக்கத்தைக் கேட்டேன். “எனக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற நினைவில் பல முறை வற்புறுத்தினார். ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை” என்று விளக்கம் கூறினார்.

இரண்டு மாமனிதர்களை அன்று காண முடிந்தது. தியாகத்தின் திருவுருவம் ஒரு மாமனிதர். அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் திருவுருவம் மற்றொரு மனிதர். இந்த இரண்டு மாமனிதர்களும் ஒருவர்மேல் ஒருவர் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதை நேரே கண்டேன். இவர்களோடு இந்த மாமனித வர்க்கம் அழிந்து விட்டது போலும்.

எஸ்.சீனிவாச ஐயங்காளின் வள்ளன்மையைக் கூட அன்போடு மறுதலிக்கும் திரு.வி.கவின் மற்றொரு புறத்தை இப்பொழுது காணலாம்.

சென்னையை அடுத்துள்ளது வெட்டுவானம் என்ற ஊர். பலி நிறுத்தம் தொடர்பாகச் சைனர் ஸ்ரீபால் அவர்களுடன் சின்னையாவும் நானும் சென்றிருந்தோம். காலைக் கூட்டம் முடிந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு செங்குந்த முதலியார், தம்முடைய வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு சின்னையாவை அழைத்தார். இருவரும் சென்றோம். இரண்டு இலைகள்; பக்கத்தில் இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் மோர், இலையில் உட்கார்ந்தாலும் சின்னையாவும் முதலியாரும்