பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க ♦ 129


வியப்படைந்த முதலியார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்காமல் இருபத்தைந்து பேரை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட எனக்கு, என் திருமணத்தையொட்டி விருந்து வைப்பதாக ஒரு பத்திரிகை அடித்து, இருநூறுக்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து ராயப்பேட்டை ‘பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை’யில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து நடத்தினார். சின்னையா அவர்களும் சினம் தணிந்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

என் திருமணத்திற்குப் பிறகு சின்னையா அவர்களே என்னை இராயப்பேட்டையில் குடியமர்த்தினார்கள். அடிக்கடி வீட்டுக்கு வந்து எங்களிடம் பேசி, தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்கள். என் வீட்டின் எதிரேயிருந்த தியாகராஜ முதலியார் என்பவரை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, எப்பொழுது தேவைப்பட்டாலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து உதவுமாறு தியாகராஜ முதலியாரைப் பணித்தார்கள்.

1925இல் தொடங்கிய என்னுடைய பேச்சுப்பணி மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது. பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரியும்போதுகூட எல்லாச் சனி ஞாயிறுகளிலும் சொற்பொழிவுக்காக வெளியூர் சென்று வந்தேன். இப்போக்குச் சரியானதன்று எனக் கருதிய இறைவன் என் கண்முன்னர் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டினான். ஒருமுறை சின்னையாவின் வீட்டில் நான் அமர்ந்திருக்கும்போது பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் திரு.வி.க.வைப் பார்க்க வந்தார். சமய எதிர்ப்பை மிக விரிவாகப் பெரியாரும் அவர் தொண்டர்களும் நடத்திக் கொண்டிருந்தார்கள். சைவ சமயப் பெரியோர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டார்கள். தப்பித் தவறி அவர்கள் ஏதாவது விழா நடத்தினாலும் திரு.வி.க.வை அதற்கு அழைப்பதில்லை. அடிக்கடி