பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 - நான் கண்ட பெரியவர்கள்

செயல்களைச் சிந்தையை அடக்கியவர்கள் அனாயாசமாகச் செய்ய முடியும். இத்தகைய ஆற்றல்கள் பெற்றவர்களையே வள்ளுவப் பேராசான் 'செயற்கரிய செய்வார்'(குறள்:26) என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறியவுடன் காஷாயம் உடுத்திக்கொண்டு, தாங்களே ஞானத் தலைவர்கள் என்று சொல்லித் திரிகின்றவர்களை மனத்தில் நினைக்க வேண்டா. இவர்கள் பெரியவர்களும் அல்லர்; செயற்குரியவற்றைக்கூட இவர்கள் செய்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது.

பெரியர் என்று வள்ளுவர் குறிப்பிடுவது ஒருவர் உருவத்தையோ, உடையையோ, பதவியையோ வைத்து அன்று, இந்தப் பெரியவர்கள் கோவணம்மட்டுமே அணிந்திருந்தாலும், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பர். எந்த ஆசாபாசங்களும் இவர்களைப் பற்றுவதில்லை . விருப்பு வெறுப்பு, சுகம்-துக்கம், சூடு-குளிர்ச்சி என்ற இரட்டைகளை வென்ற இவர்களைச் சமதிருஷ்டி உடையவர்கள் என்று கீதை கூறுகின்றது. 'சேய்போல் இருப்பர் கண்டீர் சிவஞானிகளே' என்கிறார் பட்டினத்தார். இந்த இடத்தில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலே கூறியவற்றைப் பார்த்து விட்டு, பெரியோர் என்பவர்கள் துறவிகளாக உலக வாழ்க்கையில் ஈடுபடாதவர்களாக இருப்பர் என்று தயை கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டா. காலை முதல் மாலை வரை இலக்கியப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை ' என்பவற்றிலேயே பெரும்பொழுதைச் செலவழித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களும் பன்மொழிப் புலமை, பல்கலைப் புலமை என்பவற்றை அனாயாசமாகப் பெற்று வாழ்ந்த குருதேவர் தெ.பொ.மீ அவர்களும் இந்தப் பெரியோர் பட்டியலில் அடங்குவர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களில் ஒரு சிலரே பெறக்கூடிய பெரும்பதவியை வகித்த மகாகனம்(Rt. Hon.)