பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சிந்தாதிரிப்பேட்டையில் அவருடைய வீட்டுக்குச் சென்று பேசும் வாய்ப்பும் நிரம்பக் கிடைத்தன. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எதைப்பற்றிப் பேசினாலும் தமக்குரிய இயல்பு மாறாமல், எவ்வித உணர்ச்சியையும் முகத்திலோ பேச்சிலோ காட்டாமல் உரையாடலில் பங்குகொள்ளும் ஓர் ஒப்பற்ற மனிதர் பல்கலைச் செல்வர்.

அவருடைய ஜாதகத்தில் ஒரு தனிச்சிறப்பு உண்டென்று கருதுகிறேன். தொடக்க காலத்திலிருந்தே யார் யாருக்கு அவர் உபகாரம் செய்தாரோ அவர்கள் அத்தனை பேரும் ‘ஒருவர்கூட விடாமல்’ அவருக்குப் பகையாக மாறினர். ஆங்கிலம் தெரியாத எத்தனை பேருக்குப் பிஎச்.டி பட்டம் பெற அவர் ஆங்கிலத்தில் எழுதி உதவினார் என்பதையும் நான் அறிவேன். பட்டம் வாங்கிய அத்தனை புண்ணியவான்களும் அவருக்குப் பகைவராக மாறியது மட்டுமல்ல; ‘தமிழ்த் துரோகி’ என்றும் ஏசினர்.

தம்மால் உபகாரம் பெற்ற இத்துணைப் பேரும் எப்பொழுது பகைவராக மாறி ஏசினரோ, அப்பொழுதாவது உபகாரம் செய்வதை நிறுத்திக் கொண்டாரா என்றால், அதுதான் இல்லை. உண்மையைத் தெரிந்துகொள்ளாமலேயேகூட என்னெதிரே மலேசியாவில் அவரைத் தரக்குறைவாகப் பேசிய ஒரு பேராசிரியரைச் சில நிரூபணங்களைக் காட்டி என்னால் முடிந்தவரை அவரைத் திருப்தி செய்ய முயன்றேன். சென்னைக்கு வந்ததும் குருதேவரிடம், ஆங்கிலமே தெரியாத அவருக்கு பிஎச்.டி பட்டம் பெற உதவியமைக்காகக் குருதேவரைச் சாடினேன். “போப்பா, இதையெல்லாம் பெரிசுபடுத்தாதே, என்னமோ அந்த நேரத்தில் பேசிட்டான். அதையெல்லாம் மனத்தில் வைத்திருக்காதே” என்று எனக்கு உபதேசம் செய்தார். ஏசினவர் ஒருவர், ஏசப்பட்டவர் குருதேவர் உபதேசம் எனக்கு, இதைவிட வியப்பு ஒன்றும் உண்டு. நாலுபேர் மத்தியில் மிகக் கேவலமாகத் தம்மை எந்தப்