பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152 ♦ நான் கண்ட பெரியவர்கள்



இதிலேயே பழகிவந்த எனக்கு, தெ.பொ.மீ.யின் வாழ்க்கை, ஒரு சிலிர்ப்பைத் தந்தது. நாற்பத்து மூன்று, நாற்பத்தைந்துகளில் இவ்வளவு பெரிய நவாவர்ண பூசை செய்த தெ.பொ.மீ. அவர்கள், படிப்படியாக அதனை விட்டுவிட்டார். 1960 முதல் மணிக்கணக்கில் தியானத்தில் அமர்ந்துவிடுவார். ஒருசில காலம் என்னுடைய வீட்டிலேயே அவர் இருக்கும் பேற்றைப் பெற்றேன். அப்பொழுது அவர் தியானத்தில் தொடங்கிச் சமாதிக்குச் சென்றுவிடுதலை நானும் என் மனைவியும் கண்டுள்ளோம்.

இந்த அகவளர்ச்சி அந்த மனிதரை எந்த அளவிற்கு மாற்றிற்று என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூற விரும்புகிறேன்.

மந்தைவெளியில் நான் குடியிருந்தபொழுது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. பிரபலமான ஒரு மாத இதழ் ஆசிரியர் எனக்கு மிக்க நண்பராயினும் ஏதோ ஒரு காரணத்தால், என்மேல் சினங்கொண்டு, என்னைவைத்து ஒரு சிறுகதை எழுதிவிட்டார். என்னுடைய பெயரையே குறிப்பிட்டு, ஒரு துறவியிடம் நான் நெருங்கிப் பழகி, பிறகு அவரை விட்டுவிட்டதற்கு ஒரு காரணத்தை எழுதியிருந்தார். நண்பர்கள் பலரும் இதைப் படித்துவிட்டு, தொலைபேசி மூலம் எனக்குக் கூறினர். உடனிருந்த தெ.பொ.மீ.யிடம் நான் இதனைக் கூறவில்லை. அதே நேரத்தில் கம்பன் விழாவிற்காக, அதனை நடத்துபவர் ஒருவர் என்னை அழைக்க வந்தார். ‘அண்ணா! இன்னாரைத் தலைவராகப் போட்டுள்ளேன், உங்களைப் பேசும்படியாக ஏற்பாடு செய்துள்ளேன்’ என்றார் அவர். உடனே நான் ‘சந்தோஷமான செய்தி; அவனைக் கிழித்துத் தோரணம் கட்டவேண்டுமென்று விரும்பியிருந்தேன்; நல்ல சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்’ என்றேன். விழாக்காரர் பதறிப்போய் ‘அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். எங்கள் விழா நன்கு நடைபெறவேண்டும்’ என்று கெஞ்சினார். இந்தக் கூத்து