பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 ♦ நான் கண்ட பெரியவர்கள்



அவர் சொன்னபடியே அந்த விநாடி முதல் இன்று வரை நடந்துவருகிறேன்.

என்னுடைய இந்த மாற்றத்தின் பயனாகக் குருதேவர் தம் பூத உடல் மறைந்த பிறகும், இன்றுவரை, என்னுடைய ஆன்ம வளர்ச்சிக்கு வழிகாட்டியாக நின்று, தேவைப்படும்போதெல்லாம், என்ன செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றார்.

என்றுமே நோய் என்று பெரிதாகச் சொல்லிக் கொண்டு ஆஸ்பத்திரியிலேயோ வீட்டிலேயோ படுக்கும் நிலை என்றுமே அவருக்கு வந்ததாக எனக்கு நினைவே இல்லை. 1975-வாக்கில் எதிர்பாராதவிதமாக அமரர் கி.மு.அழகர்சாமி, தெ.பொ.மீ, நான் ஆகிய மூவரும் மேல்மருவத்தூருக்குச் செல்ல நேரிட்டது. அங்கு என்ன என்ன நடக்கிறது என்று எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சென்ற அந்த நேரத்தில் திரு.பங்காரு அடிகளார் மேல் ஏதோ ஓர் தெய்வம் வந்து பரகாயப் பிரவேசம் செய்ததுபோல் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருந்தது. பிள்ளையார் கோயிலைப் போன்ற மிகச் சிறிய கோயில், அதைச் சுற்றிப் பெரிய திறந்த வெளி. கோயிலின் எதிரே சென்னை விழுப்புரம் நெடுஞ்சாலை, அருள் வந்த நிலையில் உடனிருந்த அனைவரும் ‘ஓம்சக்தி, ஓம்சக்தி’ என்றே பேசினர். எங்களுக்கு எதுவும் எடுபடவும் இல்லை. புரியவும் இல்லை. கூட்டத்தோடு நாங்களும் நின்று கொண்டிருந்தோம். அப்போது அடிகளார் கையிலிருந்த வேப்பிலைக் கொத்தை பிலுவிலுவென்று உலுப்பினார். அதினுள்ளிலிருந்து, தங்கத் தகடுகள் தரையில் விழுந்து, விழுந்த கூணத்திலேயே ஒவ்வொரு தகடும் ஒரு திருமங்கிலியமாக மாறிவிட்டது. உடனிருந்த பக்த கோடிகளின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ‘ஓம் சக்தி ஓம் சக்தி’ என்ற பெருங் குரலெடுத்துக் கூவினர். இந்தப்