பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தந்தையார் ♦ 7


அந்தப் பாடலுக்குப் பொருள் செய்ய முடியும். நாமாகச் சிந்தித்து உரைகாண முற்பட்டுப் பலமுறை முயன்று ஏதோ மனத்தில் ஒரு வகையான உரை வகுத்துக்கொண்ட பிறகு உரையாசிரியர்களைப் படித்தால் நம்முடைய அறிவு வளரும்.

புதிய நோக்கோடு பாடல்களைப் பார்க்கலாம் என்பது அவருடைய எண்ணம். அவருடைய வாழ்க்கையில் அப்படித்தான் அவர் செய்தார். எனவே, அவருடைய வாழ்வில் பெரிய நிபுணர் என்று சொல்லக்கூடிய முறையில் பெரியபுராணத்தைக் கற்றிருந்தார். ஆதலால், அதிலும் புதிய புதிய நுணுக்கமான உரைகளை அவர் சொல்வதற்கு வாய்ப்பிருந்தது. அதே முறையில் என்னையும் பழக்கினார். சிறிய வயதில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதுகூட வீட்டில் திருக்குறள், நாலடியார் போன்றவைகளைப் படித்து ஒப்பிக்கும் பழக்கத்தையும் உண்டாக்கினார். எந்தப் பாடலையும் 2 முறை அல்லது 3 முறை படித்தால் அது மனத்தில் பதிந்துவிடும்படி படிக்க வேண்டும். என்று அவர் வற்புறுத்தியது அப்பொழுது சிறிது சங்கடத்தை உண்டாக்கியதெனினும் காலம் செல்லச் செல்ல அதன் அருமைப்பாட்டினை உண்ர்ந்தேன். பாடம் செய்வதனால் பெரிய அறிவு வளர்ச்சி ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

1958-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தந்தையார் உடல்நிலை குன்றிச் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். டாக்டர் தியாகராஜனும் நானும் மருத்துவமனையில் அவரைச் சேர்க்கச் சென்றிருந்தோம். பிரசித்தி பெற்ற மருத்துவராகிய டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியத்திடம் காட்டி, அவருடைய பார்வையின்கீழ்த் தந்தையார் அனுமதிக்கப்பட்டார்கள். டாக்டர் அவர்கள் பெரிய புராணத்தில் மிகவும் ஈடுபாடுடையவர். சிறந்த சிவபக்தர் என்பதை ஓரளவு கேள்விப்பட்டிருந்தோமே தவிர