பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 ♦ நான் கண்ட பெரியவர்கள்



இன்று பிரசித்தி பெற்று விளங்கும் கணபதி ஸ்தபதி அவர்களின் சிறிய தந்தையாரைத் தலைவராக ஏற்பாடு செய்து, அவருடன் இருபது ஸ்தபதிகளையும் சேர்த்து அனுப்பி வைத்தேன், திருக்கேதீச்சுரமுடையார் திருக்கோயில் திருப்பணி நன்கு நடைபெற்றுவருவதை அவ்வப்பொழுது கந்தையா அவர்கள் தெரிவிப்பார். மிகச் சீரிய முறையில் திருப்பணி முடிந்து குடமுழுக்கும் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசின் தலைமைச் செயலராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்து ஒய்வு பெற்ற கந்தையா வைத்தியநாதன் அவர்கள் திருக்கேதீச்சரத்தில் தங்கித் திருப்பணி நடைபெறுவதைக் கண்காணித்து வந்தார் என்பதையும் அறிந்தேன்.

ஆண்டுகள் பல ஒடி மறைந்தன. அரசுப் பணியிலிருந்த நான் மயிலாப்பூரில் வாரன் ரோடில் குடியிருந்தேன். ஒரு நாள் திடீரென்று தொலைபேசியில் கந்தையா வைத்தியநாதன் பேசினார். நான் உடனே இலங்கை புறப்பட்டு வரவேண்டும் என்று கூறினார். “மிகப் பல முறை அங்கு வந்து திரும்பிவிட்டேன்; ஓரளவு சலித்தும் விட்டேன். எனவே மன்னித்து விடுங்கள்” என்று சொன்னேன். ”மிக முக்கியமான பணி ஒன்று காத்திருக்கிறது. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு நீ வா” என்று கூறினார். வேறு வழியில்லாமல் சரி என்று ஒத்துக்கொண்டேன்.

அப்போது அவர் செல்வாக்கு எந்த அளவில் உயர்ந்து. நின்றது என்பதற்கு ஓர் உதாரணத்தை மறுநாளே கண்டுவிட்டேன். இலங்கை ஹை கமிஷன் அலுவலகத்தின் கார் என் வீட்டின் முன்னே வந்து நின்றது. இறங்கி வந்த ஒருவர் “சர் கந்தையா தகவல் அனுப்பியிருக்கிறார். உங்கள் பாஸ்போர்ட்டைக் கொடுங்கள். பதினைந்து நாளுக்கு வேண்டிய விசா குத்தி நாங்களே தருகிறோம்” என்றார். ஒவ்வொரு முறையும் விசாவுக்குப் போனால் காலை ஒரு