பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்றார். அவரை இடைமறித்த நான் ”தம்பி, சர் கந்தையா வைத்தியநாதனும் அவர் துணைவியாரும் மூன்றாம் வகுப்பில் செல்வதானால் அசஞானசம்பந்தன் ஐந்தாம் வகுப்பில் அல்லவா செல்ல வேண்டும்? இரயிலில் அப்படி ஒரு பாகுபாடு இல்லை, ஆதலால், எனக்கும் மூன்றாம் வகுப்பே வாங்கிவிடுங்கள்” என்றேன். மறுநாள் காலை யாழ்ப்பாணம் சென்று, அன்று மாலை தலைமன்னார் சென்று ஒரு கூட்டத்தில் பேசினேன். பிறகு திருக்கேதீச்சுரம் திரும்பிவிட்டோம். அதற்கடுத்த நாள் நாங்கள் மூவரும் மதிய உணவு உண்டுவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று கந்தையா அவர்கள் ஆவேசம் வந்தது போல மனைவியைப் பார்த்து “ஓ மகளே, இப்போது நாங்கள் சொல்லப் போவதைக் கவனமாக மனத்தில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அம்மாவுக்கு ஒரு வியப்பு; எனக்கும் வியப்பு என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தோம். கந்தையா அவர்கள் பேசத் தொடங்கினார். “மகளே, நான் என்று எப்பொழுது எங்கு இறந்தாலும் இதோ இவன் வந்து கொள்ளி போடுகின்றவரை என் உடம்பைப் பாதுகாத்து வை. என்ன சொல்லுவது புரிந்ததா?” என்று கூறினார். அந்த அம்மையார் ஆடிப்போய்விட்டார். எனக்கும் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. “கந்தையா இது என்ன உளறல்? சாவைப் பற்றி இப்போது என்ன கவலை? என்று அது நடந்தாலும், மலைபோல இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனைச் செய்வதுதானே முறை நண்பன் என்பது தவிர, வேறு எவ்விதத் தொடர்பும் இல்லாத நான் இதனைச் செய்யவேண்டும் என்று கூறுவது படுபயித்தியக்காரத்தனம்” என்றேன். கந்தையா அவர்கள் என் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ள வேயில்லை. மனைவியைப் பார்த்துச் “சொன்னது புரிந்ததா? மனத்தில் வைத்துக்கொள். இவன் எங்கிருந்தாலும் அவன் வருகின்றவரை காத்திருக்க